பட்டர் முருக்கு, ஒரு முறை இப்படி செய்யுங்க. செம்ம சுவையா இருக்கும்.
தேவையான பொருட்கள்
பொட்டு கடலை 200 கிராம்
பட்டர் 100 கிராம்
1 கப் அரிசி மாவு
3 டீஸ்பூன் கடலை மாவு
2 ஸ்பூன் சீரகம்
உப்பு
தண்ணீர்
பொறிக்கும் அளவு எண்ணெய்
செய்முறை : பொட்டு கடலையை பொடியாக அரைத்துகொள்ளவும். இதை பாத்திரத்தில் சேர்த்து, அரிசி மாவு, கடலை மாவு, சீரகம் , உப்பு, உருக்கிய வெண்ணை சேர்த்து கிளரவும். தொடர்ந்து சீரகம் சேர்த்து கிளரவும், தொடர்ந்து அதில், தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும். பொறிக்கும் அளவு எண்ணெய், எடுத்து முருக்கு அச்சில் மாவை சேர்த்து பிழிந்து பொறித்தி எடுக்கவும்