/indian-express-tamil/media/media_files/2025/09/23/download-76-2025-09-23-18-25-17.jpg)
என்ன தான் வெயில் காலம் முடிந்தாலும் அந்த வெப்பம் இன்னும் குறைந்தது போல தெரியவில்லை. கடந்த இரண்டு நாட்களில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்திருந்த போதிலும், தற்போது அக்கால வெயில் அதற்கான தாக்கத்தை மறைத்து வருகிறது. எனவே, வெயில் இன்னும் அதிகமாகக் கொதிக்கும் வாய்ப்பு உள்ளது.
இந்த கடுமையான வெயிலில் இருந்து பாதுகாப்பாக இருக்க, நமது உணவில் நீர் நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை சேர்க்க வேண்டும். கூடுதலாக, இயற்கையான இளநீர் மற்றும் சர்பத் போன்ற பானங்களையும் அருந்தலாம்.
இந்த நிலையில், சித்த மருத்துவர் சிவராமன் சுட்டெரிக்கும் வெயிலுக்கு சிறந்த ஒரு பானத்தை பரிந்துரைத்துள்ளார். அவர் கூறுவது இந்தப் பானம் இளநீரைவிட மேன்மையானது என்றும் தெரிவித்துள்ளார். அவரின் யூடியூப் பேச்சில், “மோர் தினசரி குழந்தைகளுக்கு பழக்கமாக்க வேண்டிய பானம்” எனவும், இளநீரை விட மோர் சிறந்தது எனவும் கூறியுள்ளார்.
பால் மோராக மாறும்போது அதில் உள்ள நச்சுகள் அகற்றப்படுவதாகவும், அதில் இருக்கும் லாக்டோ பேசில்லஸ் பாக்டீரியா நம்முடைய ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை தருவதாகவும் அவர் விளக்கியுள்ளார். எனவே, பால் பதிலாக மோர் பருகுவது சிறந்தது என்றார்.
'மோர் பெருக்கி, நீர் சுருக்கி, நெய் உருக்கி உண்பவர்தம் பேர் சொல்லப்போகுமே பிணி' என்று சித்த மருத்துவத்தில் சொல்வார்கள். இதற்கு பொருள், நீரைக் காய்ச்சி குடிக்க வேண்டும். மோரை நிறைய தண்ணீருடன் பெருக்கி குடிக்க வேண்டும். நெய்யை உருக்கி சாப்பிட வேண்டும். இந்த மூன்றையும் சாப்பிடுபவர்கள் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும்." என்று அவர் கூறுகிறார்.
மோர் சரியான ஜீரணத்திற்கு உதவுகிறது; இது செரிமானத்தை எளிதாக்கி, உபயோகமான பாக்டீரியாக்களை ஊக்குவிப்பதால் வயிற்று சிதைவுகளை குறைக்கும். மேலும், மோர் தண்ணீர் மற்றும் உப்புக் கலவையாக செயல்பட்டு, உடலில் நீரிழப்பு மற்றும் மினரல் இழப்பை தடுக்கும் தன்மை கொண்டதால் வெயில்காலத்தில் சிறந்த பானமாக இருக்கும். இது உடலை டெட்டாக்ஸ் செய்து நச்சுகளை சுத்தப்படுத்துவதோடு, சிறுநீரை அதிகரித்து சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
குறைந்த கொழுப்புள்ள பானமாக இருப்பதால் எடை கட்டுப்பாட்டுக்கும் உதவுகிறது. உடலில் கொழுப்பு அளவை சமநிலையாக்கி, இதய ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது. மேலும், மோர் தோலை ஈரமாகவும், பளபளப்பாகவும் வைத்திருப்பதுடன், குருதி சோகம் மற்றும் ரத்தக்குறைபாட்டை சரி செய்யும் விட்டமின்கள் நிறைந்தது. மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்தையும் குறைக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் சத்துக்கள் மோரில் உள்ளன. இதனால், மோர் ஒரு எளிதில் கிடைக்கும் மற்றும் சிறந்த இயற்கை பானமாகும்.
தினசரி மோர் அருந்துவதன் மூலம் உடல் ஆரோக்கியம் மேம்பட்டு, பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாப்பாக இருக்க முடியும்.
மோர் தயார் செய்வது எப்படி?
ஒரு கப் தயிர் எடுத்து அதில் சில துண்டுகள் தோல் நீக்கிய இஞ்சி சேர்க்கவும். அதனுடன் ஒரு பச்சை மிளகாய் சேர்க்கவும். சுவைக்காக சில துண்டுகள் மாங்காய் சேர்க்கவும். அவற்றுடன் கொத்தமல்லி, கருவேப்பிலை தழை சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும்.
இதனை அப்படியே மிக்சியில் சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அடித்து எடுக்கவும். அதனை ஒரு வடிகட்டியால் வடித்துக் கொள்ளவும். இப்போது சுவையான மோர் ரெடி!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.