இந்த ஸ்வீட்ட இவ்ளோ நாள் மிஸ் பண்ணீடீங்களே… ரெசிபியும் ரொம்ப ஈசி

பாதுஷாவை பொதுவாக நாம் கடையில் வாங்குவோம். ஆனால் இந்த பட்டன் பாதுஷாவை நம் வீட்டில் செய்ய முடியும்.

பாதுஷாவை பொதுவாக நாம் கடையில் வாங்குவோம். ஆனால் இந்த பட்டன் பாதுஷாவை நம் வீட்டில் செய்ய முடியும்.

author-image
WebDesk
New Update
sweet

sweet

பாதுஷாவை பொதுவாக நாம் கடையில் வாங்குவோம். ஆனால் இந்த பட்டன் பாதுஷாவை நம் வீட்டில் செய்ய முடியும்.

Advertisment

 தேவையான பொருட்கள்

ஒரு டேபிள் ஸ்பூன் தயிர்

அரை டீஸ்பூன் பேக்கிங் பவுடர்

Advertisment
Advertisements

அரை டீஸ்பூன் பேக்கிங் சோடா

ஒரு கப் மைதா

உப்பு சிறிய அளவு

4 டெபிள் ஸ்பூன் நெய்

எண்ணெய்

 பாகு ரெடி செய்ய தேவையான பொருட்கள்

அரை கப் சர்க்கரை

தண்ணீர் 1 கப்

ஏலக்காய் இடித்தது ஒரு சிட்டிகை

எலிமிச்சை சாறு 1 ஸ்பூன்

புட் கலர் 1 ஸ்பூன்

செய்முறை: ஒரு பாத்திரத்தில் தயிர்,  பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்துக்கொள்ளவும். இதை நன்றாக அடித்துகொள்ள வேண்டும். அதில் மைதா, கொஞ்சம் உப்பு, நெய் சேர்த்து நன்றாக பிசைந்துகொள்ளவும். சிறிது நேரம் அப்படியே விட்டுவிடுங்கள். தொடர்ந்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் சர்க்கரையை சேர்க்கவும். அதில் ஏலக்காய் இடித்தது, எலுமிச்சை சாறு, புட் கலர் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். ஒரு கம்பி பதம் வரும் வரை கிளரவும்.

தொடர்ந்து பிசைந்த மாவை. சிறிய உருண்டைகளாக மாற்றிய பின்பு,  அதை பட்டன் போல் நடுவில் இரு பக்கமும் அமர்த்த வேண்டும். தொடர்ந்து ஜீனி பாகில் இதை போடவும். 1 மணி நேரம் கழித்து சாப்பிட்டால் இது சுவையாக இருக்கும்.  

  “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: