விமானப் பணிப்பெண்கள் உங்களை விமானத்தில் வரவேற்று, தேநீர், காபி பரிமாறுவது, விமானப் பயண வழிமுறைகளுக்கு உதவுவது, அல்லது புறப்படுவதற்கு முன் போர்டிங் பாஸ்களை சரிபார்ப்பது மட்டுமே அவர்களின் வேலை என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், இது ஒரு சிறிய பகுதிதான். விமானப் போக்குவரத்து நிபுணர்களின் கூற்றுப்படி, விமானப் பணிப்பெண்கள் உங்களை வரவேற்கும் செயலுக்குப் பின்னால் கண்ணுக்குத் தெரியாத பல காரணங்கள் உள்ளன.
கோல்டன் எபாலெட்ஸ் ஏவியேஷன் இயக்குநர் கேப்டன் தோமர் அவ்தேஷ் கூறுகையில், “நீங்கள் விமானத்தினுள் நுழையும்போது, பணிப்பெண்கள் உங்களிடம் மரியாதையாக நடந்துகொண்டாலும், அவர்கள் ரகசியமாக உங்களை ஸ்கேன் செய்கிறார்கள். யாராவது உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்களா, அதிக பதட்டமாக இருக்கிறார்களா, போதையில் இருக்கிறார்களா அல்லது சந்தேகத்திற்கிடமாக நடந்துகொள்கிறார்களா என்பதை அவர்கள் விரைவாக ஸ்கேன் செய்வார்கள்,” என்றார்.
பயணிகள் விமானத்திற்கு முன்போ அல்லது பயணத்தின் போதோ மது அருந்தினால், அதிகப்படியான குடிப்பழக்கம் விமானத்தில் உள்ள அனைவருக்கும் கடுமையான பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்தலாம். அவர்களுக்கு மருத்துவ உதவி தேவைப்படலாம் அல்லது விமானத்தின் புறப்பாட்டை தாமதப்படுத்தலாம்.
இதுபோன்ற ஒரு பிரச்சனை ஏற்பட்டால், கதவுகள் மூடுவதற்கு முன்பு கேப்டன் அல்லது தரைப்படைக்கு எச்சரிக்கை செய்ய முடியும் என்று கேப்டன் தோமர் கூறினார்.
ஆனால் இது மட்டுமல்ல.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/07/24/cabin-crew-flight-safety-1-2025-07-24-18-46-31.jpg)
“அவர்கள் ஆரோக்கியமான பயணிகளையும், வலிமையாகவும், சுறுசுறுப்பாகவும், அமைதியாகவும் இருக்கும் நபர்களையும் ஸ்கேன் செய்கிறார்கள். விமானத்தில் அவசரநிலை ஏற்பட்டால், வெளியேற்றம் அல்லது கட்டுக்கடங்காத பயணியைக் கையாள்வது போன்ற சூழ்நிலைகளில் இவர்கள் உதவக்கூடும்,” என்று கேப்டன் தோமர் தெரிவித்தார்.
அவசர காலங்களில், விமானப் பணிப்பெண்கள் உடல்ரீதியாகத் திறமையான மற்றும் வெளியேற்றம் அல்லது பிற அத்தியாவசிய பணிகளுக்கு உதவத் தயாராக உள்ள பயணிகளை அடையாளம் காண வேண்டும் என்று அவர் விளக்கினார். அவரது கூற்றுப்படி, வரவேற்பு என்பது பயணிகளின் உடல்ரீதியான அம்சங்களையும், நடத்தையையும் கவனிக்க ஒரு வாய்ப்பாகும். “மிகவும் சிக்கலான அவசரநிலைகளில் உங்கள் உயிரைக் காப்பாற்ற அவர்கள் உயர் பயிற்சி பெற்றவர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்,” என்று கேப்டன் தோமர் கூறினார்.
எனவே, அவர்கள் மரியாதையாக இருந்தாலும், அவர்கள் விசுவல் கியூஸ்-யும் பார்க்கிறார்கள், இதற்கு ‘புரொஃபைலிங்’ (profiling) என்று பெயர், மேலும் அதற்காக அவர்கள் "மிகவும் பயிற்சி பெற்றவர்கள்".
இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.