கேபின் காய்ச்சல் அல்லது அறைக்காய்ச்சல் என்பது என்ன?

கேபின் காய்ச்சல் அல்லது அறை காய்ச்சல் என்பது நீண்டநாட்களாக தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதோடு தொடர்புடையதாகும். இப்போதைக்கு உலகம் முழுமையும் இது போன்ற அனுபவத்தைக் கொண்டிருக்கிறது.

cabin fever, what is cabin fever, how to fight cabin fever, cabin fever while in quarantine, indian express, indian express news,
cabin fever, what is cabin fever, how to fight cabin fever, cabin fever while in quarantine, indian express, indian express news,

கேபின் காய்ச்சல் அல்லது அறை காய்ச்சல் என்பது நீண்டநாட்களாக தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதோடு தொடர்புடையதாகும். இப்போதைக்கு உலகம் முழுமையும் இது போன்ற அனுபவத்தைக் கொண்டிருக்கிறது.

கேபின் காய்ச்சல் என்ற வார்த்தையைக் கேட்டதில் இருந்து பெரும்பாலானோர் 1980-ம் ஆண்டு வெளியான ஸ்டேன்லி குயுபிரிக்கின் உளவியல் திகில் திரைப்படமான ‘த ஷைனிங்க்’(The Shining) குறித்து சிந்தனை செய்திருப்பார்கள். மூன்று பேர் கொண்ட குடும்பம் ஒன்று, குளிர்காலத்தில் ஒரு அரண்மனை போன்ற ஹோட்டலை கவனித்துக் கொள்ளும் பணியில் ஈடுபடும். அதிகரிக்கும் பனிப்பொழிவு காரணமாக ஹோட்டலுக்குள் அவர்கள் மாட்டிக்கொள்கின்றனர். அவர்களை பித்துப் பிடிக்கும் நிலைக்குக் கொண்டு செல்லும், கொலையும் நடக்கும்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

கேபின் காய்ச்சல் அல்லது அறை காய்ச்சல் என்பது நீண்டநாட்களாக தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதோடு தொடர்புடையதாகும். இப்போதைக்கு உலகம் முழுமைக்கும் இது போன்ற அனுபவத்தைக் கொண்டிருக்கிறது. பெரும் தொற்றின்போது, குடும்பங்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக வீட்டுக்குள்ளேயே பதுங்கி இருக்கின்றனர். அதிக நாட்கள் வீட்டிலேயே முடங்கி இருப்பது, செயலற்ற தன்மையில் இருப்பது, கொடுங்கனவு போன்ற அனுபவத்தைத் தருவதாக இருக்கும். இது விரக்தி, பீதி, தூக்கமின்மை போன்ற விளைவுகளை ஏற்படுத்தும். ஆனால், அதே நேரத்தில் கேபின் காய்ச்சலை சமாளிக்க முடியும். நீங்கள் அதை எதிர்கொள்வதற்கான சில வழிகள் இங்கே கூறப்படுகின்றன.

தொழில்நுட்பத்தை உபயோகிக்கவும்

ஷைனிங்க் படத்தின் காலத்தைப்போல நீங்கள் வேலை செய்வதற்காக டைப்ரைட்டரை மட்டும் சார்ந்திக்க வேண்டியதில்லை. இணையதளங்களை பார்க்கலாம், போட் காஸ்ட்களை காணலாம், வீடியோ கான்பரசில் பங்கேற்கலாம். இணையத்தில் இணைந்திருங்கள், உலகில் பிறரோடு தொடர்பில் இருங்கள். சில நாட்களுக்கு ஒருமுறை தொலைவில் இருக்கும் குடும்ப உறுப்பினர்களிடம் , நண்பர்களிடம் வீடியோ கால் மூலம் பேசுங்கள்.
குறிப்பிடத்தக்க பிறரிடம் இருந்து நீ்ங்கள் தூரத்தில் இருக்கும்போது, நீங்கள் ஒரு சினிமா பார்ப்பது குறித்து தீர்மானிக்க முடியும். அதனை உண்மையான நேரம் இணைந்து பார்க்கமுடியும். அது உங்களுடைய மூவி டேட் (தூரத்தில் உறவுகளில் இருப்பவர்களை இணைக்க வடிவமைக்கப்பட்ட ஒரு கருத்து)ஆக இருக்க முடியும். தவிர பெரும்பாலானோர் வீட்டில் இருந்தபடியே பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். வீட்டில் இருந்தபடியே அவர்கள் உடன் பணியாற்றுவோருடன் இணைப்பில் இருக்கின்றனர். பிறருடன் தொடர்பு கொள்ள தொழில்நுட்பத்தை உபயோகிப்பதுதான் இதில் முக்கியம்.

உடை அணியுங்கள்

நீங்கள் உங்கள் மனதை இழந்து விட்டீர்கள் என்று வேறு யார் ஒருவரும் நினைப்பதில்லை. அவ்வாறு இருப்பதில்லை. உடையணிவது, உடனடியாக உங்களை வித்தியாசப்படுத்தும் மகிழ்ச்சியான மனதுக்கு வித்திடும். தயாராவதற்கான செயல், உங்கள் மூளையில் செயல் மாற்றத்தை ஏற்படுத்தி உங்களை மகிழ்ச்சியாக உணரவைக்கும். நீங்கள் எதிர்நோக்குவதற்கு ஏதேனும் இருப்பதை போல உணர்வீர்கள் என்று அறிவியல் கூறுகிறது. உங்கள் தோற்றத்தில், நீங்கள் அக்கறை எடுத்துக் கொள்ளாதபோது, நீங்கள் வழக்கத்தை விட பாதகமான எண்ணத்தைக் கொண்டிருப்பீர்கள். எனவே, அனைத்துக்கும் இது ஒரு நல்ல யோசனையாக இருக்கலாம். படுக்கையில் இருந்து எழுந்து, இரவு நேர உடையைக் களைந்து விட்டு, சிறிது நேரம் என்றாலும் கூட உங்களுக்குப் பிடித்தமான உடையை அணியுங்கள்.

வீட்டின் அமைப்பை மாற்றுங்கள்

தனிமைப்படுத்தலின்போது வீட்டில் இருக்கும்போது அறையைப் பார்க்கும்போது அறை இருக்கும் நிலை உங்களுக்கு சோர்வைத் தரலாம். நீங்கள் மோசமான மனநிலையில் இருப்பதைத் தவிர்க்க, உங்கள் அறையின் அமைப்பை மாற்ற முடியும். மேலும் ஆர்வமாக கொஞ்சம் போல மாற்றி அமையுங்கள். ஒரு எளிய திட்டம் என்றாலும், இது பெரிய வித்தியாசத்தை உண்டாக்க முடியும். வித்தியாசமான ஏற்பாட்டில், வித்தியாசமான இடத்தில் நீங்கள் இருக்கின்றீர்கள் என்ற உணர்வை அது தரும்.

வெளியே அல்ல. எனினும், நீங்கள் ஒரு சிறிய இடத்தை சுற்றி வர வேண்டிய தேவை இருக்கிறது. எல்லா நேரமும் பசையை ஒட்டியது போல படுக்கையிலேயே ஒட்டியிருக்க வேண்டாம். யோகா, வீட்டுக்குள்ளேயே மேற்கொள்ள வேண்டிய உடற்பயிற்சிகள், நீண்ட பயிற்சிகள் ஆகியவை உங்கள் மனநிலையை நன்றாக வைத்துக்கொள்ளவும் உதவும். சரியான மன நல ஆரோக்கியத்துக்கு கட்டுக்கோப்பான உடல் இருக்க வேண்டியது அவசியம்.
மூளையை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளுதல்

புத்தகங்கள் படியுங்கள், தொலைகாட்சி பாருங்கள், அறியும் ஆர்வம் மிக்கவர்களாக இருங்கள். உண்மையில், உங்கள் மூளையை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள, நீங்கள் புதிர்களை விடுவிக்கக் கூடிய வகையில் மனதை ஈடுபடுத்திக் கொள்ளமுடியும். வீட்டில் இருந்து பணியாற்றுவோருக்கு இது போன்ற பிடிமானம் நல்லதும் கூட. தினமும் இதனை நீங்கள் மேற்கொள்ளும்போது, சவாலான மேலும் சில மனப் பயிற்சிகளை செய்யலாம். போர்டு விளையாட்டுகள், கார்டு விளையாட்டுகள் போன்ற வீட்டுக்குள் விளையாடும் விளையாட்டுகளாகக் கூட இருக்கலாம்.

ஒரு பொழுதுபோக்கை கைகொள்ளுங்கள்

ஒவ்வொருவருக்கும் ஒரு பொழுதுபோக்கு இருக்கின்றது. உங்களுக்கு அப்படி ஒன்று இல்லையெனில், இப்போதே ஒன்றைத் தேர்ந்தெடுங்கள். புதிய இசைக்கருவியை இசைக்கப் பழகலாம். ஓவியம் வரைய, புதிய நடன வடிவம் அல்லது உங்களை மந்தப்படுத்தும் நிகழ்வுகள் அல்லாத உங்கள் மனதை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் முழுவதும் வேறு ஒன்றையும் செய்யலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Cabin fever what is cabin fever how to fight cabin fever cabin fever while in quarantine

Next Story
Jan Dhan Yojana: எஸ்.எம்.எஸ். வரும்… அப்புறம் பணமும் வரும்!fixed deposit interest rates, sbi, hdfc bank, icici bank, punjab national bank, fd rates compared
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express