கர்ப்பிணிகளின் கவனத்திற்கு… அளவுக்கு அதிகமாக காஃபி குடித்தால் உங்கள் குழந்தைக்கு நல்லதல்ல!

சர்க்கரை, கொழுப்பு, இரும்புச்சத்து ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதில் கல்லீரல் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது.

By: July 31, 2019, 4:17:22 PM

caffeine during pregnancy impacts baby’s development : நம் உடலில் இதயம் மற்றும் மூளைக்கு அடுத்தபடியாக மிகவும் முக்கிய பாகமாக கல்லீரலைக் கூறலாம். மிகவும் சென்ஸிட்டிவ்வான உறுப்பான கல்லீரல் நம் உடலில் செய்யும் வேலைகள் பற்பல. சர்க்கரை, கொழுப்பு, இரும்புச்சத்து ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதில் கல்லீரல் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. மேலும், புரத உற்பத்திக்கும் இது மிகவும் உதவிகரமாக உள்ளது.

caffeine during pregnancy impacts baby’s development

இந்நிலையில், கர்பிணித்தாய்மார்கள் காப்பி அதிகமாக குடித்தால் குழந்தையில் கல்லீரல் வளர்ச்சியைப்பாதிக்கும் என கூறப்படுகின்றது.

காபியை அருந்துவதால் ஏற்படும் பலன்களை பற்றியும், அதன் மூலம் ஏற்படும் சில ஆரோக்கிய சீர்கேடுகளை பற்றியும் பலவிதமான ஆய்வுத்தகவல்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன.

கர்ப்பிணி பெண்கள் ஒரு நாளைக்கு 2-கப் காபி குடிப்பது குழந்தைக்கு கல்லீரல் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று வேறு ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தை பருவத்தில் அதிகமாக 60 சதவீதம் வரை பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 3 மாதங்களுக்குள்ளேயே கரு கலைந்து விடுதல். வளர்ச்சி இல்லாத குழந்தை பிறக்க கூடும். குறைமாத பிரசவமும் நடக்கும். பிரசவ வலி முன்பாகவே தோன்றிவிடும்.

நச்சு கொடியோ இடம் மாறியும் போகலாம். பிரசவத்தின் போது தாய் உயிர் இழக்ககூட நேரலாம். குழந்தை மிகவும் பலவீனமாக பிறக்கலாம். அதுபோல தாயும் மோசமான நிலைக்குத் தள்ளப்படலாம்.

மேலும் படிக்க : டாலடிக்கும் கூந்தலுக்கு தேன் அவசியம் மக்களே!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Caffeine pregnancy impacts babys development

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X