கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் வகையில் பல்வேறு பகுதிகளில் பிரம்மாண்ட கேக் தயாரிக்கும் பணிகள் தொடங்கியுள்ளது.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு என்றாலே பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது கேக் தான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வயது பேதமின்றி கேக்கை விரும்புவார்கள். குறிப்பாக, கிறிஸ்துமஸ் அன்று தங்கள் அன்பை பரிமாறிக் கொள்ளும் வகையில் கேக்கை வழங்குவார்கள்.
இந்நிலையில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர உணவகத்தில் 300 கிலோ எடையிலான பிரம்மாண்ட கேக் தயாரிக்கும் பணிகள் தொடங்கியுள்ளது.
இதனை தயாரிக்க முந்திரி, உலர் திராட்சை, அத்திப்பழம், பாதாம், வால்நட் மற்றும் ஒயின் உள்ளிட்ட பொருள்களை கலவையாக்கும் மிக்சிங் திருவிழா கோலாகலமாக தொடங்கியது. இந்நிகழ்வின் சிறப்பம்சமாக, கேக் மிக்ஸிங் திருவிழாவில் ஏராளமான ஆதரவற்ற குழந்தைகள் கலந்து கொண்டனர். இந்தக் கலவை 45 நாள்களுக்கு ஊறவைக்கப்பட்டு அதன்பின்னர், கேக் தயாரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், திருச்சி கோர்ட்யார்டு மேரியட்டிலும் பிரம்மாண்ட கேக் தயாரிக்கும் பணிகள் தொடங்கியது. இது குறித்து ஃபுட் மற்றும் பேவேரேஜ் மேலாளர் கூறுகையில், கிறிஸ்துமஸ் பண்டிகையின் சிறப்பம்சமாக கேக் கருதப்படுவதாகக் கூறினார். இத்தகையை சிறப்பு வாய்ந்த கேக் தயாரிக்க அதன் மிக்ஸிங் மிக முக்கியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், பல்வேறு இடங்களில் கேக் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“