Cake Recipe Tamil video, Cake Recipe with banana chocolate: கப் மற்றும் மக் கேக்குகளை விரும்பாதவர் யார் தான் இருக்கிறார்கள்? உங்கள் இனிமையான பற்களுக்கு இது சரியான தீர்வாக அமையும். கேக் சாப்பிடணும், ஆனால் நீண்ட நேரம் ஆகக் கூடாது என்ற மனநிலையில் நீங்கள் இருக்கும் போது, இந்த கேக் உங்களுக்கு கை கொடுக்கும். வாழைப்பழம் மற்றும் சாக்லேட் காம்போவை நீங்கள் விரும்பினால், இந்த மக் கேக்கை நீங்கள் முழுமையாக அனுபவிப்பீர்கள்!
Cake Recipe Tamil Video: கேக் ரெசிபி தமிழ் வீடியோ
யூடியூப் சேனலான ஸ்பைஸ் பங்களாவின் இந்த செய்முறை உங்களுக்கு மேலும் உதவும்.
தேவையான பொருட்கள்
½ – வாழைப்பழம்
1 டேபிள் ஸ்பூன் – பால்
1 டேபிள் ஸ்பூன் – சூரியகாந்தி எண்ணெய் அல்லது கடலை எண்ணெய்
1/2 tsp – வெண்ணிலா எசென்ஸ்
உப்பு – சுவைக்கேற்ப
1/4 டீஸ்பூன் – பேக்கிங் பவுடர்
3 டேபிள் ஸ்பூன் – ஆல் பர்பஸ் மாவு
1 டீஸ்பூன் – கறுப்பு சர்க்கரை
1/4 டீஸ்பூன் – இலவங்கப்பட்டை தூள்
2 டீஸ்பூன் – சாக்லேட் துகள்கள்
செய்முறை
* ஒரு சிறிய கிண்ணத்தில் அரை வாழைப்பழத்தை எடுத்து, நன்றாக பிசைந்து கொள்ளுங்கள்.
* பழத்தை ஒரு மைக்ரோவேவ் கப்பிற்கு மாற்றி, அதோடு பால் மற்றும் கடலை / சூரியகாந்தி எண்ணெய் மற்றும் கறுப்பு சர்க்கரையும் சேர்க்கவும்.
* சர்க்கரை முழுவதுமாக கரையும் வரை நன்கு கலக்கவும். இப்போது, ஆல்பர்பஸ் மாவு மற்றும் பேக்கிங் சோடாவுடன் வெண்ணிலா எசென்ஸ் சேர்க்கவும். நீங்கள் விரும்பினால் பட்டை தூளையும் சேர்க்கலாம். ஆனால் உப்பு சேர்க்க மறக்காதீர்கள். இதனை நன்றாக கலக்கவும்.
* இறுதியாக, டார்க் சாக்லேட்டின் சில பகுதிகளைச் சேர்த்து, கோப்பையை மைக்ரோவேவில் ஒரு நிமிடம் வைக்கவும்.
* பின்னர் அதனை குளிர வைக்கவும். இறுதியாக கேக்கின் மேற்புறம் வாழைப்பழ துண்டுகள் அல்லது சாக்லேட் துண்டுகளை சேர்க்கவும்.
ஈஸியான கப்/மக் கேக் ரெடி!
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”