Advertisment

கிறிஸ்துமஸ் டே... கேக் இல்லனா எப்படி? இதோ 30 நிமிடங்களில் வீட்டிலேயே கேக் ரெடி!

ஓவன் இல்லாதவர்கள் எப்படி எளியமுறையில் கிறிஸ்துமஸ் கேக் செய்யலாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
cake recipes cake making in tamil

cake recipes cake making in tamil

cake recipes cake making in tamil : எல்லோர் வீட்டிலும் மைக்ரோ ஓவன் இருக்காது. ஓவன் இல்லாதவர்கள் எப்படி எளியமுறையில் கிறிஸ்துமஸ் கேக் செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

Advertisment

முந்திரி, பாதாம், பிஸ்தாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு அகலமான பாத்திரத்தில் மைதா, ஆப்ப சோடா, பேகிங் பவுடர், பொடித்த சர்க்கரை அனைத்தையும் சேர்த்து நன்றாக சலித்து கொள்ளவும்.

* சலித்த மாவில் பிறகு அதில் எண்ணெய், வெண்ணிலா எசென்ஸ், மஞ்சள் கலர் சேர்த்து நன்றாக கலக்கவும்.

* பின் அதில் பாலை சேர்த்து கட்டியில்லாமல் இட்லி மாவு பதத்திற்கு நன்றாக கலந்து கொள்ளவும். மாவு கட்டியாக இருந்தால் சிறிது பால் சேர்த்து கொள்ளலாம்.

* குக்கரில் ஆத்து மணலை கால் பாகம் அளவு கொட்டி அடுப்பில் வைத்து சூடாக்கவும். (கண்டிப்பா மணல் தான் போட வேண்டும்)

* பின்னர் கேக் செய்யும் அதாவது கனமான அலுமினிய பாத்திரத்தில், ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அது எல்லா இடங்களிலும் பரவும் படி தடவவும். அதன் மேலே கொஞ்சம் மைதா மாவை தூவவும். இப்படி செய்தால் கேக் ஒட்டாமல் வரும்.

* இப்போது கேக் கலவையை அந்த பாத்திரத்தில் பாதியளவு வரும்படி ஊற்றி அதன் மேலே திராட்டை, முந்திரி, பாதாம், பிஸ்தாவை தூவி விடவும். எப்பொழுதும் கேக் பாத்திரத்தின் பாதி அளவு தான் ஊற்ற வேண்டும், அப்போது தான் கேக் வெந்தவுடன் மேலே எழும்பி வரும்.

* இப்போது குக்கரில் இந்த கேக் பாத்திரத்தை வைத்து மூடவும். விசில் போட கூடாது. குக்கர் மூடியில் உள்ள கேஸ்கட் வளையத்தைப் போட வேண்டாம். மிதமான தீயில் 30 நிமிடம் வைத்த பின் குக்கரை அணைத்து விடவும். 10 நிமிடம் கழித்து எடுத்து, சூடாக பரிமாறவும்.

* சூப்பரான குக்கர் கேக் ரெடி.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment