/indian-express-tamil/media/media_files/2025/04/23/uenzUlm6bWIy50K6OGzf.jpg)
திருச்சி காவேரி ஹார்ட் சிட்டி மருத்துவமனையில் ரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தும் கால்சியத்தை அகற்றி ஸ்டன்ட் பொருத்தும் நவீன “ரோட்டாப்ளேஷன் ஆஞ்சியோபிளாஸ்டி” முறை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து நடைமுறைப்படுத்தியிருக்கின்றது.
இதுகுறித்து திருச்சி காவேரி மருத்துவமனை செயல் இயக்குனர் டாக்டர் செந்தில்குமார், இதய நோய் சிகிச்சை தலைமை ஆலோசகர் டாக்டர் அரவிந்த்குமார் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது, டெல்டா பகுதியின் இதய சிகிச்சை மையமாக விளங்கும் காவேரி மருத்துவமனை ஹார்ட்சிட்டியில், “ரோட்டாப்ளேஷன் ஆஞ்சியோபிளாஸ்டி” எனும் நவீன சிகிச்சை முறையை சீரான முறையில் செய்துவருகிறது.
வாழ்வியல் மாற்றம், வயது மூப்பு உள்ளிட்ட பல காரணங்களால் ரத்த நாளங்களில் திடமாக அமைந்துள்ள கற்களை போல் கற்பை (கால்சிஃபைடு பிளாகேஜ்) கால்சியம் மூடி ரத்த ஓட்டத்தை தடுக்கிறது. இதனால் சீரான ரத்தம் ஓட்டம் தடைபடுவதால் மனிதர்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர்.
இதனை முறியடிக்கும் விதமாக ரத்த நாளங்களில் நவீன முறையில் “ரோட்டாப்ளேஷன் ஆஞ்சியோபிளாஸ்டி” மூலம் துளையிட்டு கால்சியம் படிவங்கள் உடைக்கப்பட்டு ரத்த நாளங்கள் சுத்தம் செய்யப்படுகிறது. நரம்புகளில் ஏற்கனவே செயல்படாத இடங்களில் ரத்த ஓட்டத்தை மீண்டும் புதுப்பிக்க இது உதவுகிறது.
மிகவும் சவாலான இந்த சிகிச்சையை தலைமை இண்டர்வென்ஷனல் கார்டியாலஜிஸ்ட் டாக்டர் எஸ். அரவிந்தகுமார் தலைமையில், கடந்த 2019 முதல் 2024 வரை 40 முறை வெற்றிகரமாக செய்துள்ளார். மேலும், அவர் இதுவரை 8000-க்கும் மேற்பட்ட ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சைகள் செய்துள்ளார். டெல்டா பகுதியில் இம்முறையில் சிகிச்சை செய்தது சாதனையாகவே குறிப்பிடப்படுகிறது.
வயது முதிர்ந்த நோயாளிகளுக்கு ஆஞ்சியோ பிளாஸ்டிக் செய்ய இயலாத நிலையில் ரோட்டாப்ளேஷன் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. காவேரி ஹார்ட்சிட்டி மருத்துவமனையில் இந்த சிகிச்சை பெற்றவர்களின் சராசரி வயது 75 ஆகும். 2018 ஆம் ஆண்டு தேசிய அளவிலான புள்ளி விவரங்களில், இந்தியாவில் வெறும் 0.77% சிகிச்சைகள் மட்டுமே இம்முறையில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாதிரியான சிகிச்சையை ஒரு இரண்டாம் நிலை (Tier 2) நகரத்தில் சிறந்த முறையில் செய்யும் அளவுக்கு நம் மருத்துவமனை வளர்ச்சி பெற்றுள்ளது. வழக்கமான ஆஞ்சியோபிளாஸ்டி முறைகள் செய்ய முடியாத சிக்கலான நோயாளிகளுக்கே இந்த ரோட்டாப்ளேஷன் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை உகந்தது. நம் மருத்துவமனையின் நவீன வசதிகளும், நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவக் குழுவும் இந்த சிகிச்சையை வெற்றிகரமாக நடத்த உதவுகின்றனர்.
“இப்போதெல்லாம், இதய சிகிச்சைகளுக்காக மெட்ரோ நகரங்களுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. நம் ஹார்ட்சிட்டியில், சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும், 24 மணி நேரமும் விரைவான மற்றும் சிறந்த இதய சிகிச்சையை வழங்கும் திறன் உள்ளதாக குறிப்பிட்டனர்.
இந்த செய்தியாளர் சந்திப்பின்போது வணிக மேம்பாடு பொது மேலாளர் மாதவன், துணை மருத்துவ நிர்வாகி டாக்டர்.கோகுலா கிருஷ்ணன், தலைமை ஆலோசகர் டாக்டர்.அரவிந்தன், ஆண்ட்ரோஸ் நித்யாடோஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.