சூரிய நமஸ்காரம் அடிப்படை உடற்பயிற்சிகளில் ஒன்றாக திகழ்கிறது. இந்த சூரிய நமஸ்காரத்தை நாம் தொடர்ந்து செய்யும்போது, நமது உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன.
இந்த ஆரோக்கிய நம்மைகளை நாம் அறிந்துக் கொள்வது மிக மிக அவசியம். இந்த சூரிய நமஸ்காரத்தின் பயன்கள் குறித்து பிரபல யோகா பயிற்சியாளர் ரா. திரிவேதி தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பகிர்ந்துகொண்டார்.
இதையும் படியுங்கள்: திருச்சியை மிரட்டும் மெட்ராஸ் – ’ஐ’; அறிகுறிகள் என்ன?
அப்போது, “சூர்ய நமஸ்காரம் ஒரு வார்ம்அப் உடற்பயிற்சி அல்ல. இது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்க ஒரு நல்ல பயிற்சி. ஆகவே இதில் யோகா உள்ளிட்டவற்றை பயன்படுத்த வேண்டும்” என்றார்.
சூர்ய நமஸ்காரம் ஏன் செய்ய வேண்டும்?
சமஸ்கிருதத்தில் 'வின்யாசா' என்று சூரிய நமஸ்காரம் அழைக்கப்படுகின்றது. இது தொடர்ச்சியாக சுவாசத்தை ஒருங்கிணைக்கிறது. ஆகவே, உடல் மற்றும் மனதிற்கு சிறந்த பயிற்சியை அளிக்கிறது.
இதனால் நமது தசைகள் நன்கு இயங்குகின்றன. இது நம்மை சுறுசுறுப்பாக இயங்க உதவும். மேலும், வலுவான முதுகெலும்பு மற்றும் உறுதியான தசைகளை அடையவும், ஒருவர் நிதானமாகவும் நிதானமாகவும் இருக்கவும் உதவுகிறது.
எவ்வளவு கலோரிகள் கிரகிக்கப்படுகின்றன
இதில் நாளொன்று, வாரம் என எந்த வரையறைகளும் இல்லை. உங்கள் இதயத் துடிப்பு அதிகமாக இல்லாத இடத்தில் நீங்கள் மெதுவாகச் செய்தால், நீங்கள் அதிக கலோரிகளை கிரகிக்க முடியாது.
ஆனால் நீங்கள் அதை வேகமாக செய்தால், அது ஒரு இதய பயிற்சியாகி, அதன் காரணமாக நீங்கள் அதிகமான கலோரிகள் கிரகிக்கப்படலாம்.
என் புரிதலில், யோகாவின் பார்வையில், சூரிய நமஸ்காரங்களை சீராகச் செய்வது மிகவும் முக்கியம்.
அந்த வகையில் மிக வேகமாகவும் அல்ல, மிக மெதுவாகவும் அல்ல” என்றார்.
இதனை அக்ஷர் யோகா நிறுவனங்களின் நிறுவனர் ஹிமாலயன் சித்தா அக்ஷர் ஒப்புக்கொண்டார். மேலும், “சூரிய நமஸ்காரம் மெதுவாக செய்யப்படும்போது, 5-10 நிமிடங்களில் சுமார் 20 முதல் 30 கலோரிகள் எரிக்கப்படுகின்றன.
இது நீங்கள் பின்பற்றும் சுவாச முறையைப் பொறுத்தது. ஏனென்றால், நீங்கள் எரிக்கும் கலோரிகளின் அளவுகளில் வேகம் முக்கிய பங்கு வகிக்கிறது” என்றார்.
தொடர்ந்து, நீங்கள் சரியான சுவாச முறை மற்றும் சூரிய நமஸ்காரத்தை பயிற்சி செய்யும் போது பின்பற்ற வேண்டிய வெவ்வேறு போஸ்களின் சீரமைப்பு ஆகியவற்றைப் புரிந்து கொண்டால், அது கலோரிகளை எரிப்பதை பெரிதும் அதிகரிக்கிறது” என்றார்.
அந்த வகையில், சூரிய நமஸ்காரம் செய்த 5 முதல் 10 நிமிடங்களுக்குள் 40 முதல் 50 கலோரிகள் வரை 20 வயது முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவர்கள் கிரகித்து இருப்பார்கள்.
மேலும், பயிற்சியின் போது ஒருவர் செலவழிக்கும் கலோரிகளின் அளவு பொருத்தமான சுவாச நுட்பங்களைப் பயன்படுத்துவதை நம்பியிருக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்” என்றார்.
உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க இது ஒரு சிறந்த வழியாகும் என்பதால், திரிவேதி "108 சூரிய நமஸ்காரங்களைச் செய்வதற்குப் பதிலாக 10 நிமிடங்கள் சூரிய நமஸ்காரம் செய்ய பரிந்துரைத்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.