Advertisment

உலகைக் கவரும் தமிழ் மன்னன் கட்டிய கம்போடியா அங்கோர்வாட் கோயில்!

கடந்த 1992-ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பு அங்கோர் வாட்டை உலக மரபுச் சின்னமாக அறிவித்ததுடன், அதிகம் சிதைவுறாமல் பராமரித்தும் வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Cambodia Angkor wat temple history architecture

Cambodia Angkor wat temple history architecture

Cambodia Angkor wat temple history architecture : கம்போடியாவில் அமைந்துள்ள  அங்கோர்வாட் இந்து கோயிலைக்காண உலகின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் தினம் செல்கின்றனர்.  இரண்டாம் சூரிய வர்மன் என்ற தமிழ் மன்னன் கம்போடியாவை கைப்பற்றிய போது அங்கு உள்ள அங்கோர்வாட் என்ற இடத்தில் உலகின் மிகப் பெரிய கோயிலை கட்டியுள்ளா. இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களிலேயே இது தான் மிகப் பெரியது.

Advertisment

இக் கோயிலில் திரும்பிய திசையெல்லாம் சிற்பங்கள் தான். இந்த கோயிலின் நான்கு பக்க சுற்று சுவர்களும் முறையே 3.6 கிலோ மீட்டர்கள் நீளமுடையவை. 40 ஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் இது சாத்தியமா என்பது கேள்வி. முன்னதாக பகவான் விஷ்ணுவுகாக கட்டப்பட்டு பின் 14-15ம் நூற்றாண்டில் அது புத்த கோயிலாக மாற்றப்பட்டுள்ளது.  கம்போடியா நாட்டின் முக்கிய வருவாய் இந்த அங்கோர்வாட் கோயில் சுற்றுலாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளை நம்பி தான் உள்ளது.

கோயிலின் சிறப்புகள்:

இது உலக கட்டிடக்கலை வல்லுநர் வியக்கும் ஓர் படைப்பு கம்போடியாவின் அங்கோர்வாட் ஆலயம். 500 ஏக்கரில் பரந்திருக்கும் இந்தக் கோயிலை ஒரு கலைப் பொக்கிஷமாக பாதுகாக்கப்படுகின்றது.

இந்தக் கோயிலின் ஒரு பக்கச் சுற்றுச் சுவரின் நீளம் மூன்றரை கிலோமீட்டர். இந்தக் கோயிலுக்குள் நம் தமிழகத்து ஸ்ரீரங்கம் கோயிலைப் போன்று 20 கோயில்களை அடைக்கலாம்.

மேலும் பூமியிலிருந்து சுமார் 1000 அடி மேலே சென்று வானத்திலிருந்து படம் எடுத்தால் மட்டுமே இக்கோயிலை முழுமையாகப் படம்பிடிக்க முடியும்.

1000 அடி உயரத்தில் இருந்து பார்த்தால் மூன்று அடுக்குகளாகத் தோற்றமளிக்கிறது இக் கோயில்.

முதல் அடுக்கில் உள்ள சுவரில் ராமாயணம், மகாபாரதக் காட்சிகள் சிற்பங்களாக உள்ளன.

இரண்டாம் அடுக்கின் நான்கு திசைகளிலும் பெரிய சதுர வடிவத் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன.

மூன்றாம் அடுக்கில் விண்ணை நோக்கி உயர்ந்துள்ள ஐந்து கோபுரங்களாகக் காட்சி தருகிறது. மேலும், இக்கோயிலுக்கு மிகப் பெரிய நான்கு நுழைவுவாயில்களும் உள்ளன.

கெமர், திராவிடக் கலைகளைக் கொண்டு இக் கோயில் கட்டப்பட்டுள்ளது. கம்போடிய அரசின் தேசியக் கொடியில் தேசியச் சின்னமாகப் பொறிக்கப்பட்டுள்ளது இக்கோயிலின் தனிச்சிறப்பாகும்.

2ம் சூரியவர்மன் அங்கோர் வாட்டை முதலில் கட்டிய விஷ்ணு கோயிலை, சூரியவர்மன் இறந்த பிறகு ஆட்சிக்கு வந்த ஏழாம் ஜெயவர்மன் இதை பவுத்தக் கோயிலாக மாற்றினார்.

கடந்த 1992-ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பு அங்கோர் வாட்டை உலக மரபுச் சின்னமாக அறிவித்ததுடன், அதிகம் சிதைவுறாமல் பராமரித்தும் வருகிறது.

கொடியில் கோயில்:

இந்த நாட்டு கொடியில் அங்கோர்வாட் கோயிலை பறைசாற்றும் வகையில் இருக்கிறது என்றால் எந்தளவிற்கு இந்த கோயிலும் இந்த நாடும் இணைந்துள்ளது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க :விமானத்தில் பயணிக்க ரூ.1,299 போதும்… ஸ்பைஸ்ஜெட்டின் செம்ம ஆஃபர்…

Travel
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment