/indian-express-tamil/media/media_files/2025/04/20/zJgmzRUCfRpDcY8lPuu8.jpg)
இந்தியாவின் விவசாயத் துறையில் கடந்த சில ஆண்டுகளில் பூச்சிக்கொல்லி பயன்பாடு அதிகரித்து வருகிறது. இது மனிதர்களின் ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் நீண்ட கால தாக்கம் குறித்து கவலைகளை எழுப்புகிறது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Can a pinch of baking soda in drinking water help detox the body?
இந்த சூழலில் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ வைரலானது. அதில், குடிநீரில் ஒரு சிட்டிகை பேக்கிங் சோடாவை சேர்த்து குடிப்பது உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவும் எனவும், இவ்வாறு செய்வதால் கிளைபோசேட்டை வெளியேற்றலாம் என்றும் ஒரு வீடியோ பரவியது.
இது குறித்த உண்மைத் தன்மையை அறிய ஊட்டச்சத்து நிபுணர் மீனு பாலாஜியிடம் கருத்துகள் கேட்கப்பட்டது. "கிளைபோசேட் என்பது பல நாடுகளில் பயன்படுத்தப்படும் ஒரு களைக்கொல்லி. இவை செரிமான பிரச்சனைகள் மற்றும் புற்றுநோயை உருவாக்கும் அபாயத்துடன் தொடர்பு இருப்பதாகக் கூறி சமீப ஆண்டுகளில் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
"பேக்கிங் சோடா விளைபொருளின் மேற்பரப்பில் இருந்து கிளைபோசேட்டை அகற்றும் என்று சில ஆய்வுகள் உள்ளன. ஆனால் அதற்கான வலுவான அறிவியல் சான்றுகள் நம்மிடம் இல்லை. பேக்கிங் சோடா கிளைபோசேட்டை மேற்பரப்பில் இருந்து அகற்றினாலும், கிளைபோசேட் ஒரு முறையான களைக்கொல்லியாகும்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிளைபோசேட்டை அகற்ற வேறு என்ன வழிகள் உள்ளன?
கிளைபோசேட்டின் தன்மை காரணமாக மற்ற வழிகள் பலனளிக்கவில்லை என்றாலும், சில பழங்களின் தோலை உரித்து சாப்பிடலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். "ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் சல்ஃபோராபேன் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொண்டு கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருந்தால், நச்சுகளை வெளியேற்ற முடியும். இது தவிர ஆர்கானிக் உணவுகளை சாப்பிடலாம்" என்று அவர் அறிவுறுத்துகிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.