இதய ஆரோக்கியத்திற்கு தேங்காய் எண்ணெய் மிகவும் நல்லது என்று விஞ்ஞான பூர்வமான ஆய்வுகள் இல்லை. அதில் இருக்கும் பேட்டி ஆசிட் ஜெயின் கொழுப்பு சத்தை உடலில் தேங்காமல் பார்த்துக்கொள்ளும்.
தாவரங்களில் எடுக்கப்படும் எந்த எண்ணெய்யிலும் கொலஸ்ட்ரால் என்பது இல்லை. நமது உடல்தான் கொலஸ்ட்ராலை உருவாக்குகிறது. இந்நிலையில் நாம் சாப்பிடும் சாப்பாடு ஏற்கனவே இருக்கும் கொலஸ்ட்ரால் அளவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடாது. தேங்காய் எண்ணெய்யில் அதிக சாச்சுரெடட் கொழுப்பு சத்து உள்ளது. ஆனால் அன்சாச்சுரேடட் கொழுப்பு சத்துதான் கொலஸ்ட்ராலை அதிகப்படுத்தாது மற்றும் இதயத்தில் கொழுப்பு கட்டி உருவாகாமல் தடுக்கும்.
தேங்காய் எண்ணெய்யில் லயூரிக் ஆசிட் உள்ளது. இந்த ஆரோக்கியமான பேட்டி ஆசிட் உடலில் உள்ள கொழுப்பை அதிகமாக எரிக்க உதவும். இதனால் கொழுப்பாக மாறாமல் தடுத்து உடல் எடை குறைய உதவும்.
இந்நிலையில் நாம் மிதமான அளவில் எண்ணெய்யை பயன்படுத்த வேண்டும். ஒட்டுமொத்தமாக குறைந்த கலோரிகள் நாம் எடுத்துகொள்ள வேண்டும். கார்போஹைட்ரேட் எடுத்துகொள்வதிலும் கவனம் தேவை. இதுவே நமது இதய ரத்த குழாய்களில் ரத்த கட்டிகளாக மாறிவிடும்.
கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் ஒரு மாதத்திற்கு அரை லிட்டர் எண்ணெய்யை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
தேங்காய் எண்ணெய்யில் 90 % சாச்சுரேடட் கொழுப்பு சத்து உள்ளது. இந்நிலையில் வெண்ணையைவிட இது அதிகம். வெண்ணையில் 60 % சாச்சுரேடட் கொழுப்பு சத்து உள்ளது.
அமெரிக்கன் ஹார்ட் ஆசோசியேஷன், சாச்சுரேடட் கொழுப்பு சத்தை எடுத்துகொள்வதை குறைக்கவும், இதற்கு பதிலாக மோனோ மற்றும் பாலிசாச்சுரேடட் கொழுப்பு சத்து பயன்படுத்த பரிந்துரை செய்கிறது.
ஒரு நாளில் 1 அல்லது 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்-க்கு அதிகமாக பயன்படுத்தக்கூடாது. 28 கிராமிற்கு அதிகமாகாமல் இருக்க வேண்டும். இந்நிலையில் இதற்கு பதிலாக ஆலிவ் ஆயில், சன்பிளவர் ஆயிலை நாம் பயன்படுத்தலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“