/tamil-ie/media/media_files/uploads/2023/01/12b.jpg)
இளநீர்
இன்றைய கால கட்டத்தில் வயது வித்தியாசமின்றி பாதிக்கும் ஒரு நோயாக நீரிழிவு காணப்படுகிறது. ஒரு காலகட்டத்தில் வயதானவர்களை பாதித்த இந்த நோய், தற்போது இளவயது மனிதர்களையும் வயது வித்தியாசமின்றி பாதித்துவருகிறது.
இதனால் சுகர் பேஷண்ட்ஸ் இளநீர் அருந்தலாமா என்ற கேள்வியும் இயல்பாகவே எழுகிறது. இதற்கிடையில் பிரபல ஊட்டச் சத்து நிபுணர் தாரணி கிருஷ்ணன் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “பொதுவாக இளநீர் அனைத்து தரப்பு மக்களும் அருந்தலாம். சுகர் பேஷண்ட்ஸ் கூட இளம் தென்னங்காய்களில் உள்ள இளநீரை அருந்தலாம்.
அந்த இளநீர் சற்று உவர்ப்பு சுவையில் காணப்படும். ஆனால் முத்திய அல்லது தேங்காய் தண்ணீர் குடிப்பது நல்லதல்ல. ஆனால் இளம் தென்னங்காய்களில் உள்ள இளநீர் குடிக்கலாம்.
அதில் வழுக்கு எனப்படும் முதிர்ச்சியடையாத தேங்காய் இருக்காது. ஆனால் தேங்காய் அல்லது நன்கு விளைந்த இளநீரை சுகர் பேஷண்ஸ்ட் அருந்தக் கூடாது” எனப் பதில் அளித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.