Advertisment

சுகர் பேஷண்ட்ஸ் இளநீர் அருந்தலாமா? ஊட்டச்சத்து நிபுணர் பதில் என்ன?

சுகர் பேஷண்ட்ஸ் இளநீர் அருந்தலாமா? இளநீர் அருந்தினால் சுகர் அதிகரிக்குமா? என்பன போன்ற பல்வேறு கேள்விகளுக்கு ஊட்டச்சத்து நிபுணர் ஒருவர் பதில் அளித்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Can diabetics drink tender coconut water

இளநீர்

இன்றைய கால கட்டத்தில் வயது வித்தியாசமின்றி பாதிக்கும் ஒரு நோயாக நீரிழிவு காணப்படுகிறது. ஒரு காலகட்டத்தில் வயதானவர்களை பாதித்த இந்த நோய், தற்போது இளவயது மனிதர்களையும் வயது வித்தியாசமின்றி பாதித்துவருகிறது.

Advertisment

இதனால் சுகர் பேஷண்ட்ஸ் இளநீர் அருந்தலாமா என்ற கேள்வியும் இயல்பாகவே எழுகிறது. இதற்கிடையில் பிரபல ஊட்டச் சத்து நிபுணர் தாரணி கிருஷ்ணன் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் பேசுகையில், “பொதுவாக இளநீர் அனைத்து தரப்பு மக்களும் அருந்தலாம். சுகர் பேஷண்ட்ஸ் கூட இளம் தென்னங்காய்களில் உள்ள இளநீரை அருந்தலாம்.

அந்த இளநீர் சற்று உவர்ப்பு சுவையில் காணப்படும். ஆனால் முத்திய அல்லது தேங்காய் தண்ணீர் குடிப்பது நல்லதல்ல. ஆனால் இளம் தென்னங்காய்களில் உள்ள இளநீர் குடிக்கலாம்.

அதில் வழுக்கு எனப்படும் முதிர்ச்சியடையாத தேங்காய் இருக்காது. ஆனால் தேங்காய் அல்லது நன்கு விளைந்த இளநீரை சுகர் பேஷண்ஸ்ட் அருந்தக் கூடாது” எனப் பதில் அளித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tender Coconut
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment