Advertisment

வாயு, அஜீரணம்; சாப்பிடும் போது தண்ணீர் குடித்தால் இந்த பிரச்சனை ஏற்படுமா?

தண்ணீர் மற்றும் வயிற்று அமிலங்கள் ( stomach acids) சுற்றி உள்ள கட்டுக்கதை, அதற்கான நிபுணர் விளக்கத்தை இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Drinking water

வயிறு மற்றும் செரிமான ஆரோக்கியம் என்று வரும்போது, ​​பல கட்டுக்கதைகள் மற்றும் தவறான கருத்துகள் உள்ளன. ஒரு பொதுவான கட்டுக்கதை என்னவென்றால், சாப்பிடும் போது அல்லது அதற்குப் பிறகு தண்ணீர் குடிப்பது வயிற்று அமிலங்களை நீர்த்துப்போகச் செய்யும், இது நாம் சாப்பிட்ட உணவு செரிப்பதற்கு சிரமத்தை கொடுக்கும். இதனால் வாயு, வயிறு வீக்க உணர்வு (bloating) போன்ற செரிமான பிரச்சனை ஏற்படும் என ஒரு கதை  கூறுப்படுகிறது. 

Advertisment

உண்மை என்னவென்றால், இதன் இரண்டின் செயல்களும் வேறு வேறு. வயிற்று அமிலங்கள் நீர் உட்கொள்ளலைப் பொருட்படுத்தாமல் திறம்பட செயல்பட வடிவமைக்கப்பட்டுள்ளன. தண்ணீர் குடிப்பது நமது உடலுக்கு தேவையான நீரேற்றத்தை வழங்க, செரிமானத்திற்கு உதவுகிறது. 

வயிறு இரைப்பை அமிலத்தை (gastric acid) உற்பத்தி செய்கிறது, முதன்மையாக ஹைட்ரோகுளோரிக் அமிலம் என்று சொல்லப்படுகிறது. இது உணவு செரிப்பதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது, செரிமானத்திற்கு தேவையான என்சைம்ஸை  செயல்படுத்துகிறது மற்றும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாவைக் அழிக்கிறது.

வயிற்றில் அமிலங்கம் அதிகம் இருக்கும்.  வயிற்றில் pH பொதுவாக 1.5 முதல் 3.5 வரை இருக்கும், இது சரியான செரிமானத்திற்கு அவசியம். 

வயிற்று அமிலம் Vs தண்ணீர்

வயிறு என்பது ஒரு தசை உறுப்பு ஆகும், இது அதிக அளவு உணவு மற்றும் திரவத்திற்கு இடமளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  நீங்கள் உணவு சாப்பிடுவதற்கு ஏற்ப வயிறு விரிவடைகிறது. தண்ணீர் வயிற்றுக்குகுள் சென்று மற்ற உணவுகளுடன் 
கலக்கும்போது, ​​​​அது இரைப்பை அமிலத் தன்மையை மாற்றாது. வயிறு அதன் அமில சூழலை பராமரிக்க ஒரு குறிப்பிடத்தக்க திறனை கொண்டுள்ளது.

சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பது குடிப்பது உணவை மென்மையாக சாப்பிட  உதவுகிறது. வயிற்றில் உணவை உடைத்து செரிக்க உதவுகிறது. தண்ணீர் குடிப்பது வயிறு நிரம்பியது போன்று உணர வைக்கும். இது அதிகப்படியான உணவு சாப்பிடுவதை தடுக்கும் அதனால் ஏற்படும் உடல் அதிகரிப்பை தடுக்கும். 

 சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பது palate-ஐ சுத்தப்படுத்தும், உணவின் சுவையை அதிகரிக்கவும்.

ஆங்கிலத்தில் படிக்க:   Can drinking water with food cause gas or indigestion?

வயிற்றில் அமிலங்கம் அதிகம் இருக்கும்.  வயிற்றில் pH பொதுவாக 1.5 முதல் 3.5 வரை இருக்கும், இது சரியான செரிமானத்திற்கு அவசியம். 

வயிற்று அமிலம் Vs தண்ணீர்

வயிறு என்பது ஒரு தசை உறுப்பு ஆகும், இது அதிக அளவு உணவு மற்றும் திரவத்திற்கு இடமளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  நீங்கள் உணவு சாப்பிடுவதற்கு ஏற்ப வயிறு விரிவடைகிறது. தண்ணீர் வயிற்றுக்குகுள் சென்று மற்ற உணவுகளுடன் 
கலக்கும்போது, ​​​​அது இரைப்பை அமிலத் தன்மையை மாற்றாது. வயிறு அதன் அமில சூழலை பராமரிக்க ஒரு குறிப்பிடத்தக்க திறனை கொண்டுள்ளது.

சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பது குடிப்பது உணவை மென்மையாக சாப்பிட  உதவுகிறது. வயிற்றில் உணவை உடைத்து செரிக்க உதவுகிறது. தண்ணீர் குடிப்பது வயிறு நிரம்பியது போன்று உணர வைக்கும். இது அதிகப்படியான உணவு சாப்பிடுவதை தடுக்கும் அதனால் ஏற்படும் உடல் அதிகரிப்பை தடுக்கும். 

 சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பது palate-ஐ சுத்தப்படுத்தும், உணவின் சுவையை அதிகரிக்கவும் 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment