தினமும் ஒரு பிளம்ஸ் 4 வாரங்களுக்கு சாப்பிட்டபோது, கொலஸ்ட்ரால் குறைந்துள்ளது என்று ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது. இதில் இருக்கும் நார்சத்து மட்டும் கொலஸ்ட்ராலை குறைப்பது இல்லை. கொலஸ்ட்ராலை குறைப்பதற்கான பைடோ நியூட்ரியன்ஸ் உள்ளது.
இதில் உள்ள கரையக்கூடிய நார்சத்து, கொலஸ்ட்ராலுடன் சேர்ந்து, அதை ஜீரண வழிதடத்திலிருந்து வெளியேற்றுகிறது. இதுபோல அதிக அளவு ஆண்டி ஆக்ஸிடண்ட், நார்சத்து, வைட்டமின்ஸ் உள்ளதால் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.
இந்த கரையக்கூடிய, நார்சத்து, கொலஸ்ட்ராலை ஜீரண வழி தடத்தில் இருந்து நீக்குவதால், இது ரத்ததில் போய் சேராது. மேலும் இதில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட், நார்சத்து எல்.டி.எல் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது.இந்நிலையில் பிளம்ஸ் நமது கொலஸ்ட்ராலை குறைத்தாலும், இது மட்டும் ஒட்டுமொத்தமாக உதவாது. நல்ல உடல் பயிற்சி, சரியான அளவு உணவை எடுத்துகொள்வதால் மட்டுமே கொலஸ்ட்ரால் முழுவதுமாக குறைய உதவும்.
READ IN English