Advertisment

தினமும் 3 கேரட் சாப்பிட்டால் நிறத்தில் மாற்றம் ஏற்படுமா? ஆனால் இந்த ஆபத்து இருக்கு பாஸ்

நம்மில் பலருக்கு கேரட் பிடிக்கும். இந்நிலையில் தினமும் 3 கேரட் சாப்பிட்டால், நமக்கு பொலிவான சருமம் கிடைக்கும் என்ற ஒரு வீடியோ தற்போது டிரெண்டாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
கேரட்

கேரட்

நம்மில் பலருக்கு கேரட் பிடிக்கும். இந்நிலையில் தினமும் 3 கேரட் சாப்பிட்டால், நமக்கு பொலிவான சருமம் கிடைக்கும் என்ற ஒரு வீடியோ தற்போது டிரெண்டாகி வருகிறது.

Advertisment

இந்நிலையில் இதற்கு,  ’ஒருவருடம் முழுவதும் சாப்பிட்டால், நிறத்தில் மாற்றம் மற்றும் பொலிவு கிடைக்கும் என்று சிலர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இதுபோல் மாற்றம் ஏற்படாது. சருமம் பொலிவாக மாறும். ஆனால் நிறத்தில் மாற்றம் ஏற்படாது என்று கூறுகின்றனர்.

ஆனால் சிலர் இந்த வீடியோவை பார்த்து 10 கேரட் வரை சாப்பிட்டுள்ளனர். அவர்களின் உடல் நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. இந்நிலையில் ஒரு நாளைக்கு 20 முதல் 50 மில்லி கிராம் பீட்டா கெரோட்டினி எடுத்துக்கொண்டால் சருமத்தின் நிறம் குறிப்பாக கைகளின் உற்பகுதி, பாதம், உடலில் மடங்கும் பகுதிகளின் நிறம் மாறும்.

ஆனால் தினமும் 3 கேரட் எடுத்துகொள்ளக் கூடாது. இரண்டு நாளைக்கு ஒரு முறை பாதி அளவில் உள்ள ஒரு கேரட் சாப்பிட்டால் போதுமானது.

இதில் பீட்டா கரோட்டினி உள்ளது, இது இயற்கையாக வெயிலில் இருந்து நம்மை காப்பாற்றும். புற்று நோய் ஏற்படாமல் தடுக்க உதவும் என்றும் கூறப்படுகிறது.   

இந்நிலையில் ஒரு வீடியோ டிரண்டானால் அதுபோல செய்ய வேண்டும் என்பதில்லை என்றும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

TAMILNEWS
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment