முட்டை என்பது சிறந்த புரத சத்து கொடுக்கும் உணவாக உள்ளது. சர்க்கரை நோயாளிகள் மற்றும் இதய நோயாளிகள் முட்டை சாப்பிடுவதை தவிர்ப்பது வழக்கம். இந்நிலையில் சர்க்க்ரை நோயாளிகள் முட்டையை எடுத்துகொள்ளலாமா? என்பது தொடர்பாக விரிவான பார்வையை தெரிந்துகொள்வோம்.
நீங்கள் புரத சத்துடன், கார்போஹைட்ரேட்டை எடுத்துகொள்ளும்போது, இந்த கார்போஹைட்ரேட், குளுக்கோஸாக மாறுவதற்கு அதிக நேரம் தேவைப்படும். இதனால் சாப்பிட்ட பின்பு ரத்த சர்க்கரை வேகமாக அதிகரிக்காது.
1 கிராம் கார்போஹைட்ரேட் எடுத்துகொண்டால் 4 கலோரிகள் கொடுக்கும். அதுபோலத்தான் 1 கிராம் புரத சத்தும் 4 கலோரிகளை கொடுத்தாலும், புரத சத்து எடுத்துகொண்டால் அதிக நேரம் பசிக்காது. இதனால் அதிக கலோரிகளை எடுத்துகொள்ள மாட்டோம். ரத்த சர்க்கரை அதிகமாகாது. குறைந்த அளவு புரத சத்தை எடுத்துகொள்ளும் போதும், தசைகள் வலிமை குறையும், இதனால் வயதான சர்க்கரை நோயாளிகளுக்கு எலும்பு முறிவு ஏற்படலாம்.
குறைந்த தசைகளின் அளவு, இன்சுலின் செயல்பாட்டை உடல் எடுத்துகொள்ளாத நிலைக்கு கொண்டு செல்லும். தசைகளின் மாசு குறைவதால், பேட்டி லிவர் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் கல்லீரல் செயலிழப்பு ஏற்படலாம்.
சாதாரண அளவில் உள்ள முட்டை, 66 கலோரிகளை கொண்டது. 6 கிராம் புரத சத்தை கொடுக்கும். 4.6 கிராம் கொழுப்பு சத்து உள்ளது. இதில் இருக்கும் 20% கொழுப்பு சத்து சாச்சுரேடட் புரத சத்து. இதில் மிக குறைந்த அளவிலே வைட்டமின் கார்போஹைட்ரேட் உள்ளது. வைட்டமின் பி2, வைட்டமின் பி12, போலேட், பையோட்டின், பான்தோதினிக் ஆசிட், சோலின் உள்ளது. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் டி உள்ளது.
சர்க்கரை நோயாளிகளுக்கு, 15 முதல் 20 % கலோரிகள் புரத சத்தின் மூலம் கிடைக்க வேண்டும். குறிப்பாக தினமும் கிடைக்க வேண்டும். உடல் பயிற்சி செய்பவர்கள் மற்றும் விளையாட்டில் ஈடுபடுபவர்கள் ஒரு கிலோவிற்கு 1 முதல் 1.5 கிராம், வரை புரத சத்து எடுத்துகொள்ள வேண்டும். சர்க்கரை நோயாளிகளுக்கு, முட்டை என்பது குறைந்த கார்போஹைட்ரேட் கொண்ட உணவும். 2 பெரிய முட்டைகளில் வெறும் 1 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது.
Read in english