தினமும் உடற்பயிற்சி... மூளை அளவை பாதிக்குமா? டாக்டர்கள் சொல்வது என்ன?

உடற்பயிற்சி என்பது உடல் வலிமைக்கான ஒரு கருவி மட்டுமல்ல — அது மூளையின் ஆரோக்கியம், நினைவாற்றல், சிந்தனை திறன், மனநிலை ஆகியவற்றை பராமரிக்கும் இயற்கை மருந்தாகும்.

உடற்பயிற்சி என்பது உடல் வலிமைக்கான ஒரு கருவி மட்டுமல்ல — அது மூளையின் ஆரோக்கியம், நினைவாற்றல், சிந்தனை திறன், மனநிலை ஆகியவற்றை பராமரிக்கும் இயற்கை மருந்தாகும்.

author-image
Mona Pachake
New Update
unnamed

உடற்பயிற்சி என்பது உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கான ஒரு வழி என்றே பலர் நினைக்கிறார்கள். ஆனால் சமீபத்திய ஆய்வுகள், அது உடலுக்கு மட்டுமல்லாமல் மூளையின் ஆரோக்கியத்தையும், செயல்திறனையும் மேம்படுத்தும் என்று தெரிவிக்கின்றன.

Advertisment

தொடர்ந்து உடற்பயிற்சி செய்தால் நினைவாற்றல், கவனிப்பு திறன், சிந்தனை திறன் ஆகிய மூளையின் முக்கிய செயல்பாடுகள் வளர்ச்சி பெறுகின்றன. இது மூளைச் செல்கள் புதிதாக உருவாகவும், பழைய செல்கள் ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது.

மூளை ஆரோக்கியம் என்றால் என்ன?

உலக சுகாதார நிறுவனம் (WHO) வெளியிட்டுள்ள வரையறைபடி, “மூளை ஆரோக்கியம் என்பது ஒருவர் வாழ்நாள் முழுவதும், நோய் இருந்தாலும் இல்லாவிட்டாலும், அவருடைய முழுத் திறனையும் பயன்படுத்த உதவும் திறன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

  • அதாவது, அறிவாற்றல், உணர்ச்சி, நடத்தை, அசைவு, சிந்தனை போன்ற அனைத்து மூளைச் செயல்பாடுகளும் ஒருங்கிணைந்து சிறப்பாக இயங்குவதே மூளை ஆரோக்கியத்தின் அடையாளம்.
  • மூளை எவ்வாறு செயல்படுகிறது என்பதை தீர்மானிப்பதில் உடல் ஆரோக்கியம், பாதுகாப்பான சூழல், சமூக உறவுகள், வாழ்நாள் முழுவதும் கற்றல் போன்றவை முக்கிய பங்காற்றுகின்றன.
Advertisment
Advertisements

உடற்பயிற்சி மூளை வளர்ச்சிக்கு எவ்வாறு உதவுகிறது?

ஹார்வர்ட் மருத்துவ ஆய்வுகள் கூறுவது: “உடற்பயிற்சி மூளைச் செல்களை பாதுகாக்கும் ரசாயனங்களை வெளியிடுகிறது, புதிய செல்கள் வளர உதவுகிறது, மேலும் மூளையில் புதிய இரத்த நாளங்களை உருவாக்குகிறது.”

  • இதனால் மூளை நன்றாக ஆக்சிஜன் பெறுகிறது; நினைவாற்றலும் சிந்தனை திறனும் அதிகரிக்கின்றன.
  • உடற்பயிற்சி செய்யாதவர்களுடன் ஒப்பிடுகையில், தொடர்ந்து உடற்பயிற்சி செய்பவர்களின் மூளைப் பகுதிகள் அளவில் பெரிதாகவும் செயல்திறனில் மேம்பட்டதாகவும் இருக்கும் என ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

மருத்துவர் கூறும் விளக்கம்

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நரம்பியல் நிபுணராக பணிபுரியும் மருத்துவர் பிரபாஷ் பிரபாகரன் இதுபற்றி கூறுகிறார்: “உடற்பயிற்சி என்பது உடலுக்கே அல்ல, மூளைக்கும் ஆரோக்கியமானது. நினைவாற்றலை மேம்படுத்தவும், மனநிலையை சமநிலைப்படுத்தவும், அறிவாற்றலை அதிகரிக்கவும் உடற்பயிற்சி உதவும்.”

மூளையின் நான்கு முக்கிய பகுதிகள் — பிராண்டல், பரிட்டாள், டெம்போரல், ஒக்கிப்பிட்டால் லோபஸ் — இவற்றில் Frontal lobe தான் சிந்தனை, திட்டமிடல், முடிவெடுக்கும் திறன் போன்றவற்றை கட்டுப்படுத்துகிறது. இதனைச் செயலில் வைத்திருக்க உடற்பயிற்சி முக்கியம் என்று அவர் குறிப்பிட்டார்.

மூளை ஆரோக்கியத்திற்கு பரிந்துரைக்கப்படும் இரண்டு வகை பயிற்சிகள்

  • மனம் சார்ந்த பயிற்சிகள் (Cognitive training)
  • வாசித்தல் (புதினம், கட்டுரை, செய்தி போன்றவை — தொடர்ந்து வாசிப்பது முக்கியம்)
  • புதிய திறன் கற்றல் (இசை, நடனம், புதிய மொழி)
  • புதிர்கள் (சுடோகு, வார்த்தை விளையாட்டு, கணக்குப் புதிர்கள்)
  • ஏரோபிக் உடற்பயிற்சிகள் (Aerobic exercises)
  • தீவிர நடைபயிற்சி
  • ஓட்டம்
  • சைக்கிள் ஓட்டுதல்
  • நீச்சல்

“இதயத் துடிப்பு மற்றும் சுவாசம் அதிகரிக்கும் எந்தவொரு அசைவும் ஏரோபிக் உடற்பயிற்சியாகும்,” என்கிறார் மருத்துவர் பிரபாஷ்.

ஆய்வுகள் கூறும் அதிசய விளைவுகள்

பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ஆய்வில், ஏரோபிக் உடற்பயிற்சிகள் மூளையின் ஹிப்போகேம்பஸ் (Hippocampus) பகுதியை விரிவாக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. இந்த பகுதி நினைவாற்றல் மற்றும் கற்றலுக்கான மையமாகும். மூளையில் BDNF (Brain-Derived Neurotrophic Factor) எனப்படும் புரதம் உடற்பயிற்சியால் அதிகரிக்கிறது. இது நியூரான்களின் வளர்ச்சியை ஊக்குவித்து, நினைவாற்றலை வலுப்படுத்துகிறது.

உடற்பயிற்சி என்பது உடல் வலிமைக்கான ஒரு கருவி மட்டுமல்ல — அது மூளையின் ஆரோக்கியம், நினைவாற்றல், சிந்தனை திறன், மனநிலை ஆகியவற்றை பராமரிக்கும் இயற்கை மருந்தாகும்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: