நமது பார்வை ஆரோக்கியத்தை நமது ஜெனிடிக்ஸ், வாழ்க்கை முறைதான் தீர்மானிக்கிறது. இந்நிலையில் பார்வை திறனை அதிகரிக்க இன்ஸ்டாகிராமில், ஒரு குறிப்பு அதிக கவனம் பெற்றுள்ளது. தூங்குவதற்கு முன்பாக பெருஞ்சூரகம் மற்றும் 2 பாதாம் சாப்பிட்டால் கண் பார்வை கூடுதல் ஆரொக்கியமாக மாறும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் பெருஞ்சீரகத்தில் வைட்டமின் ஏ உள்ளது. இது கண் பார்வையை அதிகரிக்கும். மேலும் பாதாமில் வைட்டமின் இ மற்றும் ஓமேகா 3 பேட்டி ஆசிட் இருக்கிறது. இதுவும் கண்களுக்கு நன்மையே தருகிறது.
வைட்டமின் ஏ சத்து குறைந்த வெளிச்சம் இருக்கும்போது நன்றாக பார்வை தெரிய நமது ரெட்டினாவிற்கு உதவுகிறது. இது வைட்டமின் இ சத்து கண்களை சேதமடையாமல் பார்த்துகொள்ளும். ஒமேகா 3 பேட்டி ஆசிட்ஸ் ஒட்டுமொத்த கண் பாரவை ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.
இந்நிலையில் இவை இரண்டையும் ஒன்றாக சாப்பிட்டால் நிச்சயம் கண்பார்வை அதிகரிக்கும் என்பதற்கு எந்த ஆய்வுகளும் இல்லை. ஆனால் நல்ல கண் பார்வையை நாம் பெருவதற்கு சீரான உணவு முறை, அதிக காய்கறிகள், முழு தானியங்கள் சாப்பிட வேண்டும். உடல் எடையையும் சீராக வைத்துகொள்ள வேண்டும். புகை பழக்கத்தை நிறுத்த வேண்டும். குறிப்பாக சூரிய ஒளியில் இருந்து கண்களை காப்பாற்ற வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“