சூடு தண்ணீரில் இஞ்சி, கிராம்பு, எலுமிச்சை சேர்த்து குடித்தால் உடல் எடை குறையும் என்று கூறப்படுகிறது. இதை நாம் இரவில் குடிக்க வேண்டும். இதை எப்படி செய்வது என்பதை தெரிந்துகொள்வோம்.
1 கப் சூடான நீரில், எலுமிச்சை துண்டுகள் அல்லது எலுமிச்சை சாறு , 2 முதல் 3 கீராம்பு, இஞ்சி சிறிய துண்டை சேர்த்து அப்படியே விட்டுவிடுங்கள். சிறிது நேரம் கழித்து இரவில் குடிக்கவும்.
இந்நிலையில் இதில் இருக்கும் பண்புகள் உடல் எடையை குறைக்க உதவுகிறது. இஞ்சியில் வீக்கத்திற்கு எதிரான பண்புகள் உள்ளது. இது நமது ஜீரணத்திற்கு உதவுகிறது. உடல் இயக்கத்தை ஊக்கப்படுத்துகிறது. இதனால் உடல் எடை குறைய உதவும்.
கிராம்பில் ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளது. மேலும் வீக்கத்திற்கு எதிரான பண்புகள் உள்ளது. எலுமிச்சையில் வைட்டமின் சி உள்ளது. மேலும் உடல் இயக்கத்திற்கு உதவுகிறது.
சூடான நீரை நாம் குடித்தால் உடலின் நீர் தேவையை சீராக்கும். மேலும் இதில் தொற்றுகள் இருக்காது. மேலும் உடல் எடை குறைய நினைப்பவர்கள் அதிகம் சுடு தண்ணீரை பயன்படுத்துகிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“