முடி கொட்டினால் எண்ணெய் வைக்கலாமா? கூடாதா? டாக்டர் ஷர்மிகா விளக்கம்
முடி உதிர்வு, வறண்ட கூந்தல், பொடுகுத் தொல்லை பிரச்னைகளுக்கு தலையில் எண்ணெய் தேய்ப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும், முடி உதிர்வுக்கு முக்கிய காரணம் என்ன, எண்ணெய் தேய்த்தல் எப்படி உதவுகிறது என்பது குறித்தும் மருத்துவர் ஷர்மிகா கூறுகிறார்.

Advertisment
முடி உதிர்வுக்கான காரணம்:
தலைமுடி உதிர்வுக்கு முக்கிய காரணம், உடலில் ஏற்படும் அதிகப்படியான பித்தம் அல்லது உடல் சூடுதான். பித்தம் அதிகமாகும்போது, தலை முடி பலவீனமடைந்து உதிரத் தொடங்குகிறது. இந்த அதிகப்படியான பித்தம் வெறும் முடி உதிர்வுடன் மட்டும் நிற்காமல், வறண்ட சருமம் மற்றும் மங்கலான பார்வை போன்ற பிற உடல்நலப் பிரச்னைகளுக்கும் ஏற்படும். எனவே, முடி உதிர்வைத் தடுக்க, முதலில் உடல் சூட்டைக் குறைப்பது அவசியம் என்கிறார் டாக்டர் ஷர்மிகா.
எண்ணெய் தேய்த்தலின் முக்கியத்துவம் கூறிய மருத்துவர் ஷர்மிகா, நல்லெண்ணெயை (எள் எண்ணெய்) உச்சந்தலையில் தேய்ப்பது உடல் சூட்டைக் குறைக்க உதவுகிறது. நம் முன்னோர்கள் உடல் சூட்டைக் குறைப்பதற்காக தலையின் உச்சியில் நல்லெண்ணெய் தேய்க்க அறிவுறுத்தினர். இது வெறும் கூந்தல் பராமரிப்பு மட்டுமல்ல, முழுமையான உடல் ஆரோக்கியப் பழக்கமாகும்.
Advertisment
Advertisements
எப்படி, எப்போது எண்ணெய் தேய்க்க வேண்டும்?
எண்ணெய் தேய்ப்பதற்கு என சில பாரம்பரிய நாட்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. புதன் மற்றும் சனிக்கிழமைகளில் ஆண்கள் எண்ணெய் தேய்க்கலாம். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் எண்ணெய் தேய்க்கலாம். இந்த நாட்களில் நல்லெண்ணெயை உச்சந்தலையில் நன்கு தேய்த்து, சிறிது நேரம் ஊறவிட்டு, பின்னர் குளிர்ந்த நீரில் குளிப்பது உடல் சூட்டைக் கணிசமாகக் குறைக்கும்.
எண்ணெய் தேய்த்தல் மட்டுமல்லாமல், கூந்தல் வளர்ச்சிக்கு இன்னும் சில முக்கியமான பழக்கவழக்கங்கள் உள்ளன. உச்சந்தலையை மசாஜ் செய்வது இரத்த ஓட்டத்தை அதிகரித்து, முடி வளர்ச்சிக்கு உதவும். தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உடலை நீரேற்றமாக வைத்து, கூந்தல் வறட்சியைக் குறைக்கும். புரதம் நிறைந்த உணவுகளை உட்கொள்வது கூந்தல் வேர்களை வலுப்படுத்தி, முடி உதிர்வைத் தடுக்கும் என்கிறார் டாக்டர் ஷர்மிகா.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.