இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவது என்னவென்றால், ஒருவரின் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவு சாதாரண நிலைக்குக் கீழே குறையும் போது இந்த நிலை ஏற்படுகிறது.
இந்த நிலை ஒருவருக்கு உடல் நடுக்கம், வியர்வை அதிகமாக சுரப்பது, குழப்பம் மற்றும் சுயநினைவு இழப்பு போன்ற அறிகுறிகளுக்கு வழிவகுக்கும். இருப்பினும், குறைந்த இரத்த சர்க்கரையுடன் தொடர்புடைய அறிகுறிகளில் ஒன்று பேச்சு மந்தமானதாகும்.
"அதிக இரத்தச் சர்க்கரைக் குறைவு ஒருவருக்கு ஏற்பட்டால், மந்தமான பேச்சு மற்றும் குழப்பம், மங்கலான பார்வை, கூச்ச உணர்வு அல்லது உணர்வின்மை போன்ற பிற நரம்பியல் அறிகுறிகளை ஏற்படுத்தும். ஒருவர் கோமா நிலைக்கு கூட செல்லலாம்,” என்று ஷாலிமார் பாக் ஃபோர்டிஸ் மருத்துவமனையின் உள் மருத்துவத்தின் மூத்த ஆலோசகர் டாக்டர் பவன் குமார் கோயல் கூறினார்.
ஏனென்றால், மனித மூளை ஆற்றலுக்காக குளுக்கோஸ் அல்லது சர்க்கரையின் வழக்கமான விநியோகத்தை சார்ந்துள்ளது. "இரத்த குளுக்கோஸ் அளவுகள் ஒரு முக்கியமான நிலையை விட குறையும் போது, மூளை சரியாகச் செயல்பட முடியாமல், குழப்பம், உணர்வின்மை, மங்கலான பார்வை மற்றும் மந்தமான பேச்சு போன்ற நரம்பியல் அறிகுறிகளுக்கு வழிவகுக்கும்.
குறைந்த இரத்த குளுக்கோஸ் அளவுகள் தொடர்ந்தால் மற்றும் இரத்தச் சர்க்கரைக் குறைவு சிகிச்சை அளிக்கப்படாமல் இருந்தால், நோயாளி கோமா நிலைக்குச் செல்லலாம். அது உயிருக்கு ஆபத்தாக முடியும்,” என்று டாக்டர் கோயல் விளக்கினார்.
இதற்கு நாளமில்லா சுரப்பி மற்றும் நீரிழிவு நோய்க்கான ஆலோசகரான டாக்டர் ஜிம்மி பதக் கூறியதாவது, "மூளையால் குளுக்கோஸை ஒருங்கிணைத்து சில நிமிடங்களுக்கு மேல் சேமித்து வைக்க முடியாது, எனவே சுழற்சியில் இருந்து குளுக்கோஸின் தொடர்ச்சியான விநியோகம் தேவைப்படுகிறது.
குறைந்த இரத்த குளுக்கோஸ் மூளையின் இயல்பான செயல்பாட்டில் தலையிடுகிறது மற்றும் பேச்சின் மந்தநிலைக்கு வழிவகுக்கிறது.
ஆனால், இரத்தச் சர்க்கரைக் குறைவுக்கு என்ன காரணம்? நிபுணர்களின் கூற்றுப்படி, இரத்தச் சர்க்கரைக் குறைவுக்கு பல காரணிகள் உள்ளது.
செப்சிஸ், கல்லீரல் நோய், சிறுநீரக நோய், ஆல்கஹால், கட்டிகள் அல்லது கார்டிசோல் போன்ற ஹார்மோன் குறைபாடுகள் இரத்தச் சர்க்கரைக் குறைவை ஏற்படுத்தும்,” என்று டாக்டர் பதக் கூறினார்.
இவை குறைந்த இரத்த குளுக்கோஸ் மதிப்பை ஏற்படுத்தும்:
- இன்சுலின் சுழற்சி அளவு அதிகரிப்பதற்கு காரணமாகிறது
- குளுக்கோஸின் நுகர்வு அல்லது தொகுப்பு (தேவை> வழங்கல்) ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது உடலில் குளுக்கோஸின் அதிகரித்த பயன்பாட்டை ஏற்படுத்துகிறது.
- ஐ.ஜி.எஃப்-2 (இன்சுலின் போன்ற வளர்ச்சி காரணி-2) சுரக்கிறது
நீரிழிவு நோயாளிகள் கீழ்கண்ட இந்த உதவிக்குறிப்புகளைப் பின்பற்றுமாறு பரிந்துரைத்தார்.
- பகலில் வழக்கமான உணவு மற்றும் சிற்றுண்டிகளை சாப்பிடுங்கள்.
- இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை பதிவு செய்யுங்கள்.
- இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவுக்கேற்ப மருந்துகளை சரிசெய்யவும்.
- உணவைத் தவிர்ப்பது அல்லது உண்ணாவிரதம் இருப்பதைத் தவிர்க்கவும்.
- தொடர்ந்து உடற்பயிற்சி செய்யுங்கள்
- மது அருந்துவதைக் கட்டுப்படுத்துங்கள்
- குளுக்கோஸ் மாத்திரைகள் அல்லது மிட்டாய் போன்ற குளுக்கோஸின் வேகமாக செயல்படும் மூலத்தை எடுத்துச் செல்லுங்கள். இரத்தச் சர்க்கரைக் குறைவு அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக குளுக்கோஸ் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்.
“15-15 விதி இரத்த குளுக்கோஸ் குறைவாக இருக்கும்போது 15 கிராம் கார்போஹைட்ரேட்டை உட்கொண்டு 15 நிமிடங்களுக்குப் பிறகு அதை மீண்டும் பரிசோதிக்க பரிந்துரைக்கிறது. இது இன்னும் 70 mg/dL க்குக் கீழே இருந்தால், மீண்டும் உணவு உட்கொள்வது நல்லது, ”என்று டாக்டர் பதக் மேலும் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.