ஆலிவ் எண்ணெய் நாம் சமைக்கும் உணவிற்கு அதிக சுவையை சேர்ப்பதற்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், அது உங்கள் குறட்டை பிரச்சனைக்கு தீர்வாக இருக்கும் என்று நீங்கள் எப்போதாவது நினைத்ததுண்டா?
குறட்டை என்பது பலர் அனுபவிக்கும் ஒரு பொதுவான பிரச்சினை, இது குறட்டை விடுபவருக்கும் சரி, அவரின் பக்கத்தில் உறங்குபவருக்கும் சரி, தூக்கத்தில் இடையூறுகளை ஏற்படுத்துகிறது. தூக்கத்தின் போது காற்றுப் பாதைகள் தடைபடும் போது, சுற்றியுள்ள திசுக்கள், வைப்ரேட் ஆகி சத்தத்தை உருவாக்கும் போது இது நிகழ்கிறது.
டாக்டர் ஸ்டீவன் குண்ட்ரியின் கூற்றுப்படி, ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்துவது சுவாசப் பாதைகளை உயவூட்டுவதன் மூலமும் அதிர்வுகளைக் குறைப்பதன் மூலமும் குறட்டையைக் குறைக்க உதவுகிறது.
நீங்கள் படுக்கும் முன் சிறிது ஆலிவ் எண்ணெயை எடுத்துக் கொள்ளுங்கள், உங்களின் துணை உங்களை விரும்புவார், என்று அவர் ஒரு இன்ஸ்டாகிராம் வீடியோவில் கூறுகிறார்.
இருப்பினும், இதில் ஏதேனும் உண்மை உள்ளதா?
டாக்டர் சிவகுமார் கே (MD and senior consultant Respiratory Medicine at Birds Clinic asserts) விஞ்ஞான ரீதியாகப் பார்த்தால், ஆலிவ் எண்ணெய் குறட்டையை திறம்பட தடுக்கும் அல்லது குறைக்கும் வாய்ப்பு மிகக் குறைவு. ஆலிவ் எண்ணெய், அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் இதய ஆரோக்கிய, போன்ற அதன் ஆரோக்கிய நலன்களுக்காக அடிக்கடி அறியப்பட்டாலும், அது குறட்டையைத் தணிக்கும் என்பதற்கு கணிசமான ஆதாரங்கள் எதுவும் இல்லை, என்றார்.
பொதுவாக குறட்டையானது, தொண்டை தசைகள் தளர்வு, அதிகப்படியான தொண்டை திசு அல்லது நாசி நெரிசல் போன்ற சுவாசப்பாதையில் ஏற்படும் உடல் ரீதியான தடைகளால் ஏற்படுகிறது. ஆலிவ் எண்ணெய். குறட்டைக்கு வழிவகுக்கும் இந்த அடிப்படை உடலியல் சிக்கல்களை நிவர்த்தி செய்யாது, என்று டாக்டர் சிவக்குமார் விவரிக்கிறார்.
ஆலிவ் எண்ணெய் குறட்டையைத் தடுக்கும் என்ற கூற்றை வலுவாக ஆதரிக்க குறைந்த அளவே, நேரடி அறிவியல் சான்றுகள் உள்ளன. இதில் பெரும்பாலான பரிந்துரைகள் அறிவியல் ஆய்வுகளைக் காட்டிலும், பாரம்பரிய வைத்தியங்களை அடிப்படையாகக் கொண்டவை.
குறட்டைக்கு ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துகள்
பொதுவாக, ஒரு சிறிய அளவு ஆலிவ் எண்ணெயை உட்கொள்வது பெரும்பாலான மக்களுக்கு பாதுகாப்பானது. இருப்பினும், குறட்டையை நிவர்த்தி செய்ய ஆலிவ் எண்ணெயை, தூங்கும் முன் அதிக அளவில் உட்கொண்டால், அசௌகரியம் அல்லது வயிற்றுக் கோளாறு ஏற்படலாம், என்று டாக்டர் சிவக்குமார் மேலும் கூறுகிறார்
ஆலிவ் எண்ணெயை மட்டுமே நம்பியிருப்பது குறட்டைக்கான அடிப்படைக் காரணங்களான தூக்கத்தின் போது மூச்சுத்திணறல் போன்ற பல்வேறு வகையான சிகிச்சைகள் தேவைப்படுவதை கவனிக்காமல் போகலாம், என்று டாக்டர் காட்ஜ் தெரிவிக்கிறார்.
/indian-express-tamil/media/media_files/yaOVHMBn052d4j5e3bxC.jpg)
குறட்டைக்கான சிகிச்சை விருப்பங்கள்
குறட்டையை நிர்வகிப்பது ஒரு நபர் தனது வாழ்க்கை முறையை மாற்ற முயற்சிப்பது அல்லது மருத்துவ நிபுணரிடம் கலந்தாலோசித்த பிறகு மருந்து உட்கொள்வது, என்று மருத்துவர் சிவக்குமார் கூறினார்.
வாழ்க்கை முறை மாற்றங்கள்
எடை மேலாண்மை
அதிக உடல் எடை, குறிப்பாக கழுத்தில், சுவாசப்பாதையை இறுக்கி, குறட்டைக்கான வாய்ப்பை அதிகரிக்கும். உடல் எடையை குறைப்பது சுவாசப்பாதைகளை திறந்து குறட்டையை குறைக்க உதவும்.
உறங்கும் நிலை
நேராக படுப்பதை விட பக்கவாட்டில் தூங்குவதால், நாக்கு தொண்டைக்குள் பின்னோக்கி விழுவதைத் தடுக்கலாம், இது சுவாசப்பாதையை சுருக்கி குறட்டையை ஏற்படுத்துகிறது. பக்கவாட்டில் தூக்கத்தை பராமரிக்க உதவும் சிறப்பு தலையணைகள் மற்றும் பாடி பொசிஷனர்கள் உள்ளன.
ஆல்கஹால் மற்றும் மயக்க மருந்துகளை தவிர்க்கவும்
இந்த பொருட்கள் தொண்டை தசைகளை தளர்த்தி சுவாசத்தில் தலையிடலாம். உறங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு அவற்றைத் தவிர்ப்பது குறட்டையைக் குறைக்க உதவும்.
மருத்துவ சிகிச்சைகள்
*தொடர்ச்சியான பாசிட்டிவ் ஏர்வே பிரஷர் (CPAP):
தூக்கத்தில் மூச்சுத்திணறல் (OSA) கண்டறியப்பட்டவர்களுக்கு, சிபிஏபி இயந்திரங்கள் அடிக்கடி பரிந்துரைக்கப்படுகின்றன. ஒரு CPAP இயந்திரம் ஒரு மாஸ்க் மூலம் தொண்டைக்குள் காற்றை வீசுகிறது, காற்றுப்பாதைகளைத் திறந்து வைத்திருக்கிறது.
*வாய்வழி உபகரணங்கள்
தூக்கத்தின் போது காற்றுப்பாதையை திறந்து வைக்க டென்டல் டிவைசஸ் தாடை அல்லது நாக்கின் நிலையை மேம்படுத்த உதவும். தூக்கத்தில் மூச்சுத்திணறலில் நிபுணத்துவம் பெற்ற பல் மருத்துவரால் இவை பொருத்தப்பட வேண்டும்.
*அறுவைசிகிச்சை
உடற்கூறியல் அசாதாரணங்கள் குறட்டைக்கு பங்களிக்கும் சந்தர்ப்பங்களில், தொண்டையில் இருந்து அதிகப்படியான திசுக்களை அகற்றுதல் அல்லது தாடையை மாற்றியமைத்தல், போன்ற அறுவை சிகிச்சை விருப்பங்கள் பரிசீலிக்கப்படலாம்.
Read in English: Can olive oil help keep snoring at bay? Here’s what experts have to say
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“