scorecardresearch

சுகர் இருக்கிறவங்க பிரட் எப்படி சாப்பிடுவது? இதை நோட் பண்ணுங்க!

அதிக நார்ச்சத்து கொண்ட முழு தானியங்கள் நிறைந்த ஆரோக்கியமான பிரட் வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது இரத்த சர்க்கரை அளவை கட்டுபாட்டில் வைக்க உதவுகிறது.

சுகர் இருக்கிறவங்க பிரட் எப்படி சாப்பிடுவது? இதை நோட் பண்ணுங்க!

சர்க்கரை உள்ளவர்கள் உணவு கட்டுப்பாட்டை பின்பற்றுவார்கள். உடற்பயிற்சி, யோகா மேற்கொள்வர். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்வது அவசியம். அரிசி உண்பதை தவிர்த்து கோதுமை அதிக எடுத்துக் கொள்வர். சாதாரணமாக பிரட் அனைவரும் சாப்பிடுவர். ஆனால் சர்க்கரை உள்ளவர்கள் பிரட் சாப்பிடலாமா? அதை எவ்வாறு சாப்பிட வேண்டும் என்பது கேள்வியாக உள்ளது. சர்க்கரை அளவை அதிகப்படுத்துமா? என்ற கேள்விகளுக்கு நிபுணர்கள் பதில் கூறியுள்ளனர்.

அதில், சர்க்கரை உள்ளவர்கள் பிரட் சாப்பிடலாம், ஆனால் உணவில் அளவாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர். உணவுத் திட்டத்தை முறையாக மேற்கொண்டு, கார்போஹைட்ரேட் அளவுகளை முறைப்படுத்தி உண்ண வேண்டும். பொதுவாக, சாண்ட்விச்களுக்கு 15 கிராம் கார்போஹைட்ரேட் கொண்ட ஒரு பிரெட்டை தேர்ந்தெடுக்கலாம் என்கின்றனர்,

நிபுணர் கிட்டி ப்ரோஹியர் கூறுகையில், இரண்டு பிரட் துண்டுகள் 24 முதல் 30 கிராம் கார்போஹைட்ரேட்டுகளுக்குச் சமம். ஒரு துண்டு 15 கிராம் கார்போஹைட்ரேட்டுகள் கொண்டது ஆகும். இந்த அளவில் 2 பிரட்கள் சாப்பிடலாம்.

அதிக ஃபைபர் உள்ள பிரட் சாப்பிட வேண்டும்

ஃபைபர் என்பது முழு தானிய வகைகளில் காணப்படும் ஒரு வகை கார்போஹைட்ரேட் ஆகும். பிரட் போன்ற உணவுகளில் இருக்கும். நார்ச்சத்து (ஃபைபர்) அதிகம் உள்ள உணவுகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

பிரட் வாங்கும் போதும் முழு தானிய வகை பிரட் தேர்ந்தெடுத்து வாங்குவது சிறந்தது. குறைந்தது 3 கிராம் நார்ச்சத்து கொண்டதாக இருக்க வேண்டும்.

கொழுப்பு அல்லது புரதத்துடன் சேர்த்து சாப்பிட வேண்டும்

ஆரோக்கியமான வழியில் பிரட் சாப்பிட மற்றொரு வழி கொழுப்பு, புரதத்துடன் சேர்த்து சாப்பிடுவது சிறந்தது எனக் கூறியுள்ளனர். இப்படி செய்து செரிமானத்தை சீராக்குவதுடன் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது.

பிரட் உடன் கொழுப்பு அல்லது புரத உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ப்ரோஹியர் கூறுகிறார். குறிப்பாக நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது என்கிறார்.

மேலும், நீங்கள் பிரட் சாப்பிட விரும்புபவர்கள் என்றால் அதிக நார்ச்சத்து, முழு தானியங்கள் நிறைந்த முழு தானியங்கள் நிறைந்த தேர்ந்தெடுத்து வாங்கிச் சாப்பிடுங்கள். இது உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்து குறைக்க உதவுகிறது என்று நிபுணர் கூறினார். அதோடு, பிரட்டை கொழுப்பு அல்லது புரதத்துடன் சேர்த்து சாப்பிடுவதும் சிறந்தது என்று ப்ரோஹியர் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Can people with diabetes eat bread