கற்பூரம் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து நம் கூந்தலுக்கு பயன்படுத்தினால், பொடுகுத்தொல்லை தீர்வாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
பவுடர் செய்யப்பட்ட கற்பூரம் மற்றும் தேங்காய் எண்ணெய்யை குளிப்பதற்கு முன்பாக அரை மணி நேரத்திற்கு முன்பாக தலையில் தடவ வேண்டும். தொடர்ந்து முடியை ஷாம்பூ பயன்படுத்தி கழுவ வேண்டும்.
இந்நிலையில் அதிகமான எண்ணெய் மற்றும் இயற்கையாக உருவாகும் பூஞ்சை தொற்றால்தன் பொடுகு தலையில் ஏற்படுகிறது. உங்கள் உடலில் உள்ள மிகப்பெரிய உறுப்பு என்பது சருமம்தான், அது சில காரணத்திற்காக எண்ணெய் மயமாக மாறும். இதனால் மலாசீசியா குளோபோசாவால் என்ற பூஞ்சை தூண்டப்படுகிறது. இதுதான் பொடுகாக வளர்கிறது.
கற்பூரத்தில் குளுமையை ஏற்படுத்தும் தன்மை இருக்கிறது. இது வீக்கம் மற்றும் கிருமிகளை போக்கும். மேலும் இது உங்கள் தலையின் வேர் பகுதியை சுத்தம் செய்து, பூஞ்சையை வளரவிடாமல் பார்த்துகொள்ளும். பொடுகால் ஏற்படும் வீக்கம் மற்றும் இன்னல்களை நீக்குகிறது. மேலும் இது ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
தேங்காய் எண்ணெய் வரட்சியை போக்கும் சிறந்த எண்ணெய்யாகும். இதை பயன்படுத்துவதால், பொடுகு ஏற்படும் போது வரட்சியான தலைமுடி வேர்களை இது போக்கும். ஆனால் பொடுகு இருந்தால் அதிக நேரம் தலையில் தேங்காய் எண்ணெய்யை வைக்க கூடாது.
Read in english
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“