முட்டைகள் அவற்றின் புரத உள்ளடக்கம் மற்றும் பல ஆரோக்கிய நன்மைகளுக்கும் பெயர் பெற்றவை. ஆனால் மாதவிடாய் காலத்தில் முட்டை சாப்பிடலாமா? நீங்கள் ஒரு முட்டை பிரியர் மற்றும் மாதவிடாய் காலத்தில் முட்டைகளை சாப்பிடலாமா, வேண்டாமா என்ற கவலை இருந்தால், தெரிந்துகொள்ள படிக்கவும்.
மாதவிடாய் என்பது எந்தவொரு பெண்ணுக்கும் வலிமிகுந்த கட்டமாகும், ஏனெனில் ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள் காரணமாக உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன.
பெரும்பாலான பெண்கள் மாதவிடாய் சுழற்சியின் போது பிடிப்புகள், முதுகுவலி, மனநிலை மாற்றங்கள், குமட்டல் மற்றும் பிற ஒத்த நிலைமைகளை அனுபவிக்கின்றனர். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் உணவில் கவனம் செலுத்த பரிந்துரைக்கப்படுகிறது, ஏனெனில் சில உணவுகள் பிடிப்புகளை மோசமாக்கும், நீங்கள் சமாளிக்க கடினமாக இருக்கும்.
அதிர்ஷ்டவசமாக முட்டைகள் அந்த வகையில் வராது. மாதவிடாய் காலத்தில் முட்டைகளை உட்கொள்ள கூடாது என்பது கட்டுக்கதை.
பி6, டி மற்றும் ஈ போன்ற வைட்டமின்களின் களஞ்சியமாக முட்டைகள் உள்ளன, இவை அனைத்தும் பிஎம்எஸ் அறிகுறிகளை எதிர்த்துப் போராடுகின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? முட்டைகள் புரதத்தின் வளமான மூலமாகும், மேலும் உங்கள் வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும்.
முட்டையின் நன்மைகள்
முட்டைகள் பாஸ்பரஸ் மற்றும் கால்சியத்தின் நல்ல மூலமாகும், இது உங்கள் எலும்புகளை வலுவாக வைத்திருக்க உதவுகிறது. ஒவ்வொரு வாரமும் குறைந்தது ஆறு முட்டைகளை உட்கொள்வதால் மார்பக புற்றுநோயின் அபாயம் 44% குறைகிறது. ஒரு முட்டையில் 125.5 மில்லிகிராம் கோலின் (choline) உள்ளது, இது உங்கள் மூளை மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம்.
முட்டை கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் என்பது கட்டுக்கதை. முட்டை உங்கள் நல்ல கொலஸ்ட்ரால் (HDL) அளவை மேம்படுத்தும். மிதமான அளவில், முட்டைகளை தவறாமல் உட்கொள்வது, உண்மையில் பக்கவாதம் மற்றும் இதய நோய் அபாயத்தைக் குறைக்கும்.
மார்பக புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கவும் முட்டைகள் உதவும். குறைவான முட்டைகளை உண்ணும் பெண்களை விட, ஒவ்வொரு வாரமும் குறைந்தது ஆறு முட்டைகளை உட்கொள்ளும் பெண்களுக்கு, மார்பக புற்றுநோயின் அபாயம் 44% குறைகிறது என்று ஒரு ஆய்வு காட்டுகிறது.
எனவே இனி மாதவிடாய் காலங்களில் பயமின்றி உங்களுக்கு பிடித்த முட்டை ரெசிபிகளை செய்து சாப்பிடுங்கள்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“