ஃப்ரிட்ஜின் இந்தப் பகுதியில் மட்டும் முட்டையை வைக்காதீங்க! டாக்டர் அருண் குமார் அட்வைஸ்
முட்டையை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாமா என்பது குறித்து மருத்துவர் அருண் குமார் விளக்கம் அளித்துள்ளார். இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்று அறிவியல்பூர்வமாக அவர் கூறிகிறார்.
முட்டையை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்துவதால் சில இரசாயன மாற்றங்கள் நிகழ்ந்து ஆபத்தை விளைவிப்பதாக சமீபத்தில் ஒரு தகவல் பரவி வருகிறது. இதில் இருக்கும் உண்மைத் தன்மை குறித்து மருத்துவர் அருண் குமார் விளக்கியுள்ளார்.
Advertisment
முட்டையின் ஓடு பகுதியில் இயற்கையாகவே சால்மொனெல்லா என்று அழைக்கப்படும் வயிறு உபாதைகளை ஏற்படுத்தக் கூடிய கிருமிகள் இருக்கிறது. ஆனால், இவை முட்டையின் உட்புறத்தில் அவ்வளவு எளிதாக செல்ல முடியாது. ஃப்ரிட்ஜ் இல்லாமல் சாதாரண அறையின் வெப்ப நிலையில் முட்டையை வைத்திருந்தால், அவை ஒன்று முதல் இரண்டு வாரங்கள் வரை மட்டுமே கெட்டுப்போகாமல் இருக்கும் என அருண் குமார் கூறுகிறார்.
European food safety authority, US Food and Drug Administration ஆகியவை இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். அதனடிப்படையில், சுமார் நான்கு முதல் ஐந்து வாரங்கள் வரை முட்டையை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம் என ஆய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர் அருண் குமார் வலியுறுத்துகிறார்.
எனினும், முட்டையை ஃப்ரிட்ஜின் கதவுப் பகுதியில் வைக்கக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார். ஏனெனில், ஃப்ரிட்ஜின் கதவு பகுதியில் தான் குளிர்ச்சி குறைவாக இருக்கும். அதற்கு மாற்றாக ஃப்ரீசரை தவிர குளிர்ச்சி அதிகமாக இருக்கக் கூடிய ஃப்ரிட்ஜின் மற்ற பகுதிகளில் முட்டையை வைக்கலாம்.
Advertisment
Advertisements
இவ்வாறு முட்டையை பயன்படுத்தினால் அவை எளிதில் கெட்டுப்போகாமல் இருக்கும் என மருத்துவர் அருண் குமார் அறிவுறுத்தியுள்ளார்.