பிடிக்கிறதோ, இல்லையோ ஒரு பெண்ணின் அலமாரியில் ப்ராக்களும் ஒரு பகுதியாகும். இது ஒரு பொதுவான ஆடையாக இருந்தாலும், பிராவைச் சுற்றி பல கட்டுக்கதைகள் உள்ளன. அதில் முக்கியமானது, இரவில் ப்ரா அணிவதும், அண்டர்வயர்டு ப்ரா அணிவதும் புற்றுநோயை உண்டாக்குகிறது. இது உண்மையா?
இதுகுறித்து மருத்துவர் தன்யா இன்ஸ்டாகிராமில், அண்டர்வயர்டு ப்ராக்கள் புற்றுநோயை உண்டாக்கும் முகவர்கள் என்பதை நிராகரிக்கும் ஒரு தகவலை பகிர்ந்துள்ளார். இங்கே பாருங்கள்:
நீங்கள் விரும்பினால் அண்டர்வைடு ப்ரா அணியலாம், அதனால் உங்களுக்கு மார்பக புற்றுநோய் வராது. ப்ரா அணிவது, இரவில் ப்ரா அணிவது அல்லது அண்டர்வயர்டு ப்ரா அணிவது ஆகியவை மார்பகப் புற்றுநோயுடன் தொடர்புடையது அல்ல.
அண்டர்வயர்டு ப்ரா அணியும்போது, உறையில் இருந்து கம்பி வெளியே குத்தத் தொடங்கினால், பெண்கள் அசௌகரியத்தை சந்திக்க நேரிடும், அது காயப்படுத்தலாம். அண்டர்வைடு ப்ராவில் வரும் ஒரே பிரச்சனை இதுதான் என்று கூறினார்.
இதை ஏற்றுக்கொண்ட மருத்துவர் சந்தீப் நாயக் பி, பெங்களுருவில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை புற்றுநோயியல் மற்றும் ரோபோடிக் மற்றும் லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை துறை இயக்குனர் மேலும் கூறியதாவது:
டிஎன்ஏவில் ஏற்படும் மாற்றங்களால் தான் புற்றுநோய் ஏற்படுகிறது. வயது, பரம்பரை மற்றும் பிற காரணிகளால் ஒருவருக்கு புற்றுநோய் வராது. ஒருவர் அணியும் உள்ளாடை, நோயை உண்டாக்கும் செல்லுலார் மாற்றங்களை பாதிக்காது. அண்டர்வயர்டு ப்ராக்களுக்கும் புற்றுநோய்க்கும் இடையே தொடர்பைக் கூறும் தற்போதைய மருத்துவ ஆராய்ச்சி எதுவும் இல்லை.
முந்தைய ஆராய்ச்சியின்படி, அண்டர்-வயரால் உடலில் உள்-அழுத்தம் மற்றும் நிணநீர் அடைப்பு ஏற்படுகிறது என்று கருதப்பட்டது, ஆனால் அறிவியல் ஆராய்ச்சி இரண்டுக்கும் இடையே எந்த தொடர்பையும் காட்டவில்லை என்று indianexpress.com இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் அவர் கூறினார்.
அண்டர்வயர்டு ப்ராக்கள் ஏற்படுத்தக்கூடிய நீண்ட கால உடல்நலக் கேடுகளையும் அவர் நிராகரித்தார். பொருத்தமற்ற ப்ராக்கள் சுருக்கத்தையும் உணர்வின்மையையும் ஏற்படுத்தக்கூடும், ஆனால் அவை எந்த உடல்நலப் பிரச்சினைகளுடனும் இணைக்கப்படவில்லை. மக்கள் தாங்கள் விரும்பும் எதையும் சுதந்திரமாக அணியலாம். ஏனெனில், அது அவர்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் அல்லது நல்வாழ்வை பாதிக்காது.
எந்தவொரு நோயின் வளர்ச்சியிலும், குறிப்பாக புற்றுநோயின் வளர்ச்சியில் எந்த வகையான உள்ளாடைகளும் பங்கு வகிக்காது அல்லது தாக்கத்தை ஏற்படுத்தாது என்று அவர் குறிப்பிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil