செயின்ட் ஜூட் இந்தியா குழந்தை பராமரிப்பு மையங்கள் (செயின்ட் ஜூட்ஸ் அல்லது எஸ்.ஜே.ஐ.சி.சி) புற்றுநோய் சிகிச்சையில் உள்ள குழந்தைகளுக்கு வீட்டை விட்டு சிகிச்சைக்காக வெளியே வரும்போது ஒரு வீட்டை வழங்குகிறது.
ஒரு குழந்தை புற்றுநோயால் பாதிக்கப்படுவதைப் பார்ப்பது ஒரு அதிர்ச்சிகரமான நிகழ்வு.
இந்தியாவில், ஒவ்வொரு ஆண்டும் 50,000 க்கும் மேற்பட்ட புதிய குழந்தை பருவ புற்றுநோய் பாதிப்புகள் பதிவாகின்றன. வளர்ந்த மேற்கத்திய நாடுகளில், புற்றுநோய் பாதிப்பில் இருந்து குணமாகி உயிர்வாழும் விகிதம் 80-90 சதவீதம் வரை அதிகமாக உள்ளது. இருப்பினும், இந்தியாவில், பெரும்பாலான புற்றுநோய் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தாமதமான கட்டத்தில் சிகிச்சைக்கு வருவதால், புற்றுநோய் ஏற்கனவே உடலின் மற்ற பகுதிகளுக்கு பரவியிருப்பதால் உயிர் பிழைப்பு விகிதம் குறைவாக உள்ளது.
குழந்தை பருவ புற்றுநோய்கள் அரிதாக இருப்பதால், குழந்தைகளில் புற்றுநோயைக் கண்டறிய பரவலாக பரிந்துரைக்கப்பட்ட ஸ்கிரீனிங் சோதனைகள் இல்லை. இருப்பினும் சில குழந்தைகள் மரபணு காரணிகளால் ஒரு குறிப்பிட்ட வகை புற்றுநோயைப் பெறுவதற்கான அதிக ஆபத்தில் உள்ளனர்.
குழந்தை பருவ புற்றுநோய்கள் அதிக குணப்படுத்தும் விகிதத்தைக் கொண்டுள்ளது. ஆனால், மருத்துவ சிகிச்சையானது தொற்று இல்லாத, ஊட்டச் சத்து அளிக்கும் வகையிலும் மற்றும் மகிழ்ச்சியான சூழ்நிலையாலும் ஆதரிக்கப்பட வேண்டும்.
இந்தியா ஒரு தனித்துவமான சிக்கலை எதிர்கொள்கிறது, பெரும்பாலான தரமான புற்றுநோய் மருத்துவமனைகள் நகர்ப்புறங்களில்தான் உள்ளன. அதே நேரத்தில் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் கண்டறியப்படாமல் போகும் பெரும்பாலான குழந்தைகள் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். மற்றொரு பிரச்னை என்னவென்றால், கிராமப்புறங்களைச் சேர்ந்த நடுத்தரக் குடும்பங்கள்கூட நீண்ட காலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக நகர்ப்புறங்களில் தங்க முடியவில்லை.
இந்தியாவின் கிராமப்புறங்களில் இருந்து பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தங்கள் குழந்தைகளை தரமான சிகிச்சை கிடைக்கும் நகரங்களுக்கு கொண்டு வருகிறார்கள். அந்த சிகிச்சையானது இரண்டு வருடங்கள் வரை நீடிக்கும்போது, அந்த குழந்தை நீண்ட சிகிச்சை முழுவதும் வெளிநோயாளியாக இருக்கலாம் அல்லது சிகிச்சை காலம் முழுவதும் மருத்துவமனைக்கு பலமுறை பயணம் செய்ய வேண்டியிருக்கலாம்.
இந்த குடும்பங்களுக்கு சுத்தமான மற்றும் பாதுகாப்பான தங்குமிடம் கிடைக்கவில்லை. பெரும்பாலும் அவர்கள் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைக்கு அருகே உள்ள நடைபாதையில் வாழ்கின்றனர். இதன் விளைவாக, சுகாதாரமற்ற சூழ்நிலையால் குழந்தை இரண்டாம் நிலை நோய்த்தொற்றுகளுக்கு ஆளாகின்றன. பெற்றோருக்கு உணவு தயாரிக்க இடம் இல்லை, மேலும் அவர்கள் பயன்படுதுவதற்கு கழிப்பறை மற்றும் குளிக்க வசதிகள் இல்லை.
இந்த ஒட்டுமொத்த அனுபவமும் அந்த குடும்பங்களை மனச்சோர்வடையச் செய்து, அவர்கள் அடிக்கடி சிகிச்சையை கைவிட்டு, தங்கள் வீட்டிற்குத் திரும்பும் அளவிற்கு, தங்கள் குழந்தை புற்றுநோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.
இங்குதான் செயின்ட் ஜூட்ஸ் இந்தியா போன்ற அமைப்புகள் அடியெடுத்து வைக்கின்றன.
செயின்ட் ஜூட் இந்தியா குழந்தை பராமரிப்பு மையங்கள் (செயின்ட் ஜூட்ஸ் அல்லது எஸ்.ஜே.ஐ.சி.சி) புற்றுநோய் சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கு அவர்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது ஒரு வீட்டை வழங்குகிறது. இந்த குழந்தைகள், தங்கள் பெற்றோருடன், புற்றுநோய் சிகிச்சை கிடைக்காத சிறிய கிராமங்கள் மற்றும் தொலைதூர நகரங்களில் இருந்து வருகிறார்கள்.
தங்கள் குழந்தைகளின் சிகிச்சைக்காக நகரத்திற்கு வந்திருக்கும் கிராமப்புற குடும்பங்களுக்கு செயின்ட் ஜூட்ஸ் பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான வீட்டு வசதியை இலவசமாக வழங்குகிறது. அவர்கள் மருத்துவமனைகளுக்கு சிகிச்சை, சமையல் வசதிகள் மற்றும் சத்தான உணவுகள், தங்கள் குழந்தைகளுக்கு தனியாக சமைக்கப்பட்ட வீட்டு உணவு, மதிப்பு அடிப்படையிலான கல்வி, பொழுதுபோக்கு வசதிகள் மற்றும் குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கான ஆலோசனை அமர்வுகள் ஆகியவற்றிற்காக இலவச போக்குவரத்து வசதிகளை வழங்குகிறார்கள்.
பாத்திரங்கள் மற்றும் சமையலறைக் கருவிகளுடன் பகிர்ந்துகொள்ளும் சமையலறை வசதிகள் உள்ளன. அங்கே பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் விருப்பப்படி உணவை சமைக்கிறார்கள். கூடுதலாக, சுத்தமான மற்றும் சுகாதாரமான கழிப்பறைகள் மற்றும் குளிக்கும் பகுதிகளுடன் பொதுக் குளியலறைகள் உள்ளன. அத்துடன் குடும்பங்கள் தங்கள் துணிகளை துவைக்க ஒரு இடமும் உள்ளது.
இது செயின்ட் ஜூட்ஸ் போன்ற அமைப்புகளால் கொண்டுவரப்பட்ட அமைதியான மற்றும் உண்மையான மாற்றம். அவர்கள் இந்தியா முழுவதும் ஒன்பது நகரங்களில் செயல்படுகிறார்கள். 500 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிம்மதியான இரவு தூக்கத்தை வழங்குகிறது.
நீங்கள் இந்த பயணத்தின் ஒரு பகுதியாக மாறும் நேரம் இது.
ரூ. 1,000 வரை பங்களித்து, மாற்றத்தின் ஒரு பகுதியாக இருங்கள்.
இந்த இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் இப்போதே பங்களிப்பு செய்யுங்கள்.
புற்றுநோய் அல்லது குறிப்பிட்ட திட்டங்களுக்கு இருப்பிடம் அல்லது நோக்கத்துக்கு நீங்கள் பொதுவாகப் பங்களிக்கலாம்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவளித்து உதவுவதற்கு நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் ரூ. 1,000 அளித்தால், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இரண்டு வாரங்களுக்கு விருப்பமான உணவு கிடைக்கும்.
இந்த இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் இப்போதே பங்களிப்பு செய்யலாம்.
மும்பையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?
இந்த இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் இப்போதே பங்களிப்பு செய்யலாம்.
டெல்லியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?
இந்த இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் இப்போதே பங்களிப்பு செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.