பிரபல மருத்துவர் காமராஜ் தனியார் செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவரிடம் அந்த 3 நாள்கள் செக்ஸ் வைத்துக் கொள்ளலாமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், “இந்த சந்தேகம் அனைத்து தரப்பு மக்களிடத்திலும் உள்ளது. மாதவிடாய் காலத்தில் வரும் இரத்தம் அசுத்தமானது என நினைக்கின்றனர்.
உண்மையில் இந்த இரத்தம் அசுத்தமானது அல்ல. இந்த இயல்பான இரத்தத்தில் ஸ்டெம்செல் தயாரிக்கலாம். இந்த நாள்களில் செக்ஸ் வைத்துக் கொண்டால் ஜன்னி வந்துவிடும் என்றும் கூறுகின்றனர்.
இதற்காக சில ஊசியும் போட்டுக் கொள்கின்றனர். இதிலும் துளியும் உண்மை இல்லை. இதில் உண்மையென்றால் அந்த 3 நாள்களில் கரு தங்காது. ஆகவே இந்த நாள்களில் கருத்தடை சாதனம் இல்லாமல் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம்.
மேலும் இந்த நாள்களில் உடலுறவு கொண்டு உச்சம் அடைந்தால் பெண்களுக்கு நல்ல ஹார்மோன் கிடைக்கும். இது சில பெண்களுக்கு தெரியும். பலருக்கு தெரிய வாய்ப்பில்லை.
இன்னும் சொல்லப் போனால் அந்த நாள்களில் உடலுறவு மட்டுமின்றி சுய இன்பமும் பெறலாம். இது உடலுக்கு நல்லது. மன அழுத்தம் குறையவும் வாய்ப்புகள் அதிகம்.
கால்வலி, உடம்பு வலி பறந்து போய்விடும். பெண்களும் மாதவிலக்கு வலிகளை கடந்து செல்ல முடியும். ஆகவே மாதவிலக்கு காலத்தில் உடலுறவு கொண்டால், மன அழுத்தம், உடல் பிரச்னை உள்ளிட்டவற்றில் இருந்து வெளிவரமுடியும்.
அந்த வகையில் பார்க்கும்போது இதனை மருந்தாக கூட எடுத்துக் கொள்ளலாம். இது என்னுடைய சொந்தக் கருத்து இல்லை. அறிவியல் கருத்து” எனப் பதில் அளித்தார்.
எனினும், “மாதவிலக்கு காலங்களில் ஹெச்.ஐ.வி, பால்வினை நோய்கள் உள்ளவர்கள் இந்த உடலுறவை தவிர்க்க வேண்டும்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“