மாதவிலக்கு அல்லது மாதவிடாய் சுழற்சி பெரும்பாலும் தசைப் பிடிப்புகளுடன் தொடர்புடையது. இது யோனியில் இருந்து இரத்த வடிவில் வெளியேறும் கருப்பையின் உள் புறணியை அகற்றும் வழியேத் தவிர வேறில்லை. இந்த தசைப் பிடிப்புகள் சுகவீனத்தை ஏற்படுத்துவதுடன், பல்வேறு வகையான உடல் வலிக்கும் காரணமாகிறது.
சில உணவுகள் வலி மற்றும் அசௌகரியத்தை குறைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் சிலவகையான உணவுகள் வலியை அதிகரிக்கலாம். எனவே ஒவ்வொரு மாதமும் அந்த நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு புளிப்பு உணவுகளை தவிர்க்க வேண்டும் என நிறைய பெண்கள் நம்புகின்றனர். ஏனெனில் அவை நிலைமையை மோசமாக்கும், இதனால் பிடிப்புகள் இன்னும் தீவிரமடைகின்றன.
ஆனால், இதில் ஏதாவது உண்மை இருக்கிறதா, குறிப்பாக ஊறுகாய் மற்றும் எலுமிச்சை போன்ற உணவுகள் வரும்போது? இதுகுறித்து சமூக ஊடகங்களில் ‘ ’மருத்துவர் க்யூட்ரஸ்’ என்று அழைக்கப்படும் மருத்துவர் தனயா, சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில், உணவுக்கும் வலிக்கும் உள்ள தொடர்பை விளக்கியுள்ளார். அந்த பதிவில், அதிர்ஷ்டவசமாக, இந்த வதந்திகள் எதுவாக இருந்தாலும், உங்கள் அயலவர்கள் என்ன சொன்னாலும், உங்கள் கருப்பையில் சுவை மொட்டுகள் இல்லை, எனவே உங்கள் மாதவிடாய் காலத்தில் நீங்கள் எந்த வகையான உணவை உட்கொள்கிறீர்கள் என்பது முக்கியமல்ல. புளிப்பு உணவுகள் உங்கள் மாதவிடாய் வலியை மோசமாக்காது என அவர் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
எப்படி இருந்தாலும் வலி இருக்கத்தான் போகிறது. இருப்பினும் எலுமிச்சம்பழம், ஊறுகாய், புளிப்பு மிட்டாய் போன்ற புளிப்பான ஏதாவது ஒன்றை சாப்பிட ஆசை இருந்தால், நீங்கள் அதை சாப்பிடலாம். எனெனில் உங்களை வசதியாகவும் மகிழ்ச்சியாகவும் உணர தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்.
இந்த நேரத்தில் உண்மையில் உதவக்கூடிய சில உணவுகள் இருந்தாலும், இன்னும் சிலவற்றைத் தவிர்க்கலாம் என ஊட்டச்சத்து நிபுணர் ரோகினி பாட்டீல், முன்பு indianexpress.com உடன் பகிர்ந்துள்ளார், பொரித்த உணவுகள் மற்றும் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகள் உட்பட ஆயத்த தின்பண்டங்களை ஒருவர் தவிர்க்க வேண்டும், ஏனெனில் அவற்றில் உப்பு மற்றும் சோடியம் நிறைந்துள்ளது. இதை அதிகம் உட்கொள்வது மாதவிடாய் காலத்தில், வீக்கத்துக்கு வழிவகுக்கும் நீர் தேக்கத்தை ஏற்படுத்துகிறது.
அத்துடன் காபி மற்றும் ஆல்கஹாலை தவிர்ப்பதும் நல்லது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil