நமக்கு மாலை நேரத்தில் சாட் உணவுகளை சாப்பிட வேண்டும் என்று தோன்றும். குறிப்பாக நாம் உடல் எடை குறைக்க வேண்டும் என்று நினைத்தால் இந்த சாட் உணவுகளை நாம் கைவிட வேண்டும்.
குறிப்பாக இந்த சாட் உணவுகளில் பாவ் பாஜி அனைவருக்கும் பிடித்த ஒன்றாக இருக்கும். இந்நிலையில் இதில் கொஞ்சம் காய்கறிகள், பட்டர், வெங்காயம் இருக்கிறது.
இந்நிலையில் உடல் எடை குறைக்கும்போது நாம் பாவ் பாஜி செய்து சாப்பிட முடியும். இந்நிலையில் சில மாற்றங்களுடன் நாம் அதை செய்ய வேண்டும். இந்நிலையில் இதில் காய்கறி சாலட், முளைகட்டிய பச்சை பயறு சேர்த்து செய்ய வேண்டும்.
நாம் இதில் பச்சை பட்டாணி, காளிபிளவர், கேரட், வெங்காயம், குடைமிளகாய், தக்காளி, பீட்ருட் சேர்க்கலாம். மேலும் நாம் எடுத்து கொள்ளும் அந்த பன்னை முழு கோதுமையில் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும்.
நாம் செய்யும் மசாலாவில் பயன்படுத்தும் குறைந்த பட்டரை நாம் பயன்படுத்த வேண்டும். மேலும் குறைந்த எண்ணெய்யில் நாம் இதை செய்தால். நமது கலோரிகள் அதிகரிக்காது. இந்நிலையில் இந்த மசாலாவுடன் நாம் முளைகட்டிய பச்சை பயிறு, அவித்த காய்கறிகள் அல்லது சாலடை சேர்த்து சாப்பிட வேண்டும். இதுபோல நாம் அந்த பன்னுடன் பட்டருக்கு பதிலாக குறைந்த கொழுப்பு உள்ள சீல்ஸ் பயன்படுத்தலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“