புற்று நோய்: அச்சம் தவிர்க்கச் சில யோசனைகள்

மருத்துவ வசதிகள் அதிகரித்திருக்கும் இந்நாளில் புற்றுநோய் குறித்துப் பயப்படத் தேவையில்லை. ஆரம்பக் கட்டத்தில் கண்டறியப்பட்டால் புற்றுநோயைக் குணப்படுத்திவிடலாம்.

ராஜலட்சுமி சிவலிங்கம்

உடலுக்கு அடிப்படையாக உள்ள உயிரணுக்களைப் பாதிக்கும் நோய்தான் புற்றுநோய். வாய்ப்புற்று, மார்பகப் புற்று, குடல் புற்று, கருப்பை புற்று என உடலின் பல உறுப்புகளில் இந்நோய் உண்டாகிறது.

எதனால் வருகிறது புற்றுநோய்?

இதற்கு குறிப்பிட்ட காரணம் என்று ஏதுமில்லை. உயிரணுக்களின் வளர்ச்சி மற்றும் இறப்பைக் கட்டுப்படுத்தும் மரபணுக்களில் மாற்றங்கள் ஏற்பட்டு புற்றுநோயாகத் தோன்றுகிறது. புகையிலைப் பழக்கம், உணவு முறைகள், சூரியனின் கதிர்வீச்சு, மாசு, நச்சுத்தன்மையிடைய பணிக்களச் சூழல், வாழ்க்கை முறை ஆகிய பல காரணங்களால் இது ஏற்படலாம். பெற்றோரிடமிருந்து பரம்பரையாகவும் வரலாம்.

புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் புற்றுநோய்தான் அதிக அளவில் இருக்கிறது. இன்று வயது வித்தியாசம், பாலின வேறுபாடு இன்றி பெரும்பாலோர் புகையிலைப் பழக்கத்துக்கு அடிமையாக இருக்கின்றனர். சிகரெட், பீடி, பான்பராக், புகையிலை போன்ற பழக்கங்களால் வாய், நுரையீரல் போன்ற பகுதிகளில் புற்றுநோய் தாக்கலாம்.

சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கும் புற்றுநோய்க்கும் தொடர்பு இருக்கிறது. காற்று, நீர், மண் ஆகியவற்றில் புற்றுநோயை உருவாக்கும் வேதிப்பொருட்கள் இருந்தால், அவற்றைப் பயன்படுத்தும் மக்களுக்குப் புற்றுநோய் பாதிப்பு ஏற்படலாம்.

அறிகுறிகள்

நாக்கில் வெள்ளை அல்லது சிவப்பு நிறத்தில் ஏற்படும் படிமம், குரலில் திடீர் மாற்றம், தொடர் இருமல், விழுங்குவதில் சிரமம், தொண்டை அடைப்பு, நாக்கு அசைப்பதில் சிரமம் ஏற்படுதல் ஆகிய அறிகுறிகள் தொடர்ந்து இருந்தால் கவனிக்க வேண்டும். உடலில் எந்த இடத்தில் கட்டி வந்தாலும் அவற்றை உடனே கவனித்துவிட வேண்டும். வலி இல்லை என்ற அலட்சியம் ஆபத்து. காரணம் புற்றுநோய்க் கட்டிகள் பெரும்பாலும் வலியில்லாத கட்டிகளாகவே இருக்கும். திடீர் எடை குறைவும் நிச்சயம் கவனிக்கப்பட வேண்டும். அதற்கு நாமாகவே ஏதாவது காரணம் கற்பித்துக்கொள்ளக் கூடாது.

உடலின் பாகங்களில் இருந்து ரத்தம் வடிதலும் புற்றுநோய்க்கான அறிகுறிகளில் ஒன்று
காலைக் கடனில் ஏற்படும் திடீர் மாற்றமும் கவனத்தில் கொள்ளவேண்டிய சிக்கல்தான்.
மச்சங்கள் அல்லது மருக்கள் பெரிதாகுதல், அல்லது அவற்றின் நிறத்தில் மாற்றம், பெண்களுக்கு இயல்பைவிட அதிக ரத்தப்போக்கு, மாதவிடாய் நின்ற பிறகும் ரத்தப்போக்கு.
இதைத் தடுக்க முடியுமா?

மருத்துவ வசதிகள் அதிகரித்திருக்கும் இந்நாளில் புற்றுநோய் குறித்துப் பயப்படத் தேவையில்லை. ஆரம்பக் கட்டத்தில் கண்டறியப்பட்டால் புற்றுநோயைக் குணப்படுத்திவிடலாம். ஆனால் நோயைக் குணப்படுத்துவதைவிட, அது வராமல் தடுப்பது சிறந்தது. சரியான உணவுப்பழக்கம்தான் அதற்குக் கைகொடுக்கும்.
புகை மற்றும் மது பழக்கம், பான், பான் மசாலா போன்ற சுவைக்கும் வகை புகையிலை பொருட்களை உட்கொள்வது, கூர்மையான பற்கள், ரத்த சோகை.
முடியும் என்கிறார்கள், இயற்கை மருத்துவர்கள். நம் முன்னோர்களின் உணவே மருந்து கொள்கையை இதிலும் கடைபிடிக்க முடியும். புற்றுநோயால் பாதிக்கப்பட்வர்களானுல் சரி, புற்றுநோய் வராமல் இருப்பதற்கும் சரி, தினமும் சமச்சீரான உணவுப் பழக்கவழக்கம், உடற்பயிற்சி இவற்றைத் தவிர, சப்போட்டா பழம், கருவேப்பிலை, பீட்ரூட், பூண்டு, கேரட், காளான், நட்ஸ், பப்பாளி, திராட்சை, தக்காளி, மஞ்சள் தூள், கிரீன் டீ, பசலைக் கீரை, எலுமிச்சை, ஆரஞ்சு ஆகிய மிகவும் குறிப்பிடத்தக்க எளிய, இயற்கையான உணவுப் பொருள்களை உணவில் சேர்த்துக்கொள்வது பலன் தரும்.

×Close
×Close