தற்போது புரோட்டீன் பவுடன் எடுத்துகொள்வது சாதரணமாகி வருகிறது. ஆனால் சமீபத்தில் ’மெடிசன்’ என்ற ஆய்வு இதழ் ஒன்றில் வெளியான தகவல் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. 36 புரோட்டீன் சப்ளிமெண்டுகளை சோதனை செய்தபோது அதில் 70% சரியான அளவில் புரத சத்து குறிப்பிடப்படவில்லை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சில பிராண்டுகள் பாதி அளவில் மட்டுமே புரத சத்து அளவை கொடுத்துள்ளது. 14 % பிராண்டுகள், அபாயத்தை ஏற்படுத்தும் பன்கல் ஆப்லடாக்ஸின்ஸ் ( fungal aflatoxins) உள்ளது. 8 % பிராண்டுகளில் பூச்சிகொல்லிகளின் மாதிரிகள் உள்ளது.
ஐ.எம்.ஏ.ஆர்.சி குழு வெளியிட்ட ஆய்வி தகவலில், புரோட்டீன் பவுடர், இந்திய மார்க்கெட்டில் ரூ. 33,028.5 கோடிகளில் விற்பனை ஆகிறது. இந்நிலையில் இதுபோல அபாய கெமிக்கல் கொண்ட புரத சத்து பவுடரில், வலிமையான மெட்டல் அதாவது லெட், காட்மியம், மெர்க்குரி உள்ளதால், இவை நமது சிறுநீரகம், கல்லிரை பாதிக்கும்.
அதிக நாட்கள் இதை பயன்படுத்தும்போது மோசமான சிறுநீரக பாதிப்பு மற்றும் நோய் ஏற்படும். மேலும் கல்லீரல் செயலிழப்பு வரை ஏற்படலாம். மேலும் புரத சத்து பவுடரில், இனிப்பு இருப்பதால், இன்சுலின் செயல்பாடுகளை உடல் ஏற்றுகொள்ளாமல் செய்து, சர்க்கரை நோய் கூட ஏற்படலாம்.
குடலில் உள்ள பேக்டீரியாவை அதிகமாக வளரச் செய்து, அடுக்கடி வயிற்று போக்கு ஏற்பட காரணமாகவும் மாறலாம். பாராளுமன்றத்தில் கேள்விக்கு பதில் அளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, 2022-23 ஆம் ஆண்டில், புரதப் பொடிகள் மற்றும் உணவுச் சப்ளிமெண்ட்ஸ் உள்ளிட்ட உணவுப் பொருட்களை விற்கும் நிறுவனங்களுக்கு எதிராக, 38,053 சிவில் மற்றும் 4,817 கிரிமினல் வழக்குகளை உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் பதிவு செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
Read in english