/indian-express-tamil/media/media_files/2025/06/23/r-insomnia-in-seniors-2025-06-23-16-53-40.jpg)
60 வயசுக்கு மேல் தூக்கமே வரலையா? இந்த டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க; டாக்டர் சிவகுமார்
இரவில் தூங்க சிரமப்படுகிறீர்களா? வயது, மன அழுத்தம் அல்லது உடல்நலக் குறைபாடுகள் காரணமாக பல முதியவர்கள் தூக்கமின்மையை எதிர்கொள்கின்றனர். ஆனால் இயற்கையே இதற்கான தீர்வை கொண்டுள்ளது. பக்க விளைவுகள் இல்லாமல் ஆழ்ந்த, நிம்மதியான தூக்கத்தை பெற சிறந்த ஆயுர்வேத வழிமுறைகளை ஆயுர்வேத மருத்துவர் Dr. R. சிவக்குமார் கூறிய தகவல்களைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
வயதானவர்களுக்கு, நிம்மதியான உறக்கம் என்பது ஒரு கனவாகவே இருக்கிறது. தூக்கமின்மை, மூட்டு வலி போன்ற வயது தொடர்பான பிற பிரச்னைகளுடன் இணைந்து, தூக்கத்தை கெடுக்கிறது. தூக்கக் கலக்கங்களின் மூல காரணங்களைப் புரிந்துகொள்வது மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள், இயற்கை சிகிச்சைகள் மூலம் தீர்க்கலாம். 80 அல்லது 90 வயதிலும் கூட ஆழ்ந்த, புத்துணர்ச்சியூட்டும் தூக்கத்தைப் பெற முடியும். வயதானவர்களுக்கு தூக்கமின்மை ஏற்பட பல காரணங்கள் உள்ளன:
உடல்நலப் பிரசனைகள்: மூட்டு வலி, நீரிழிவு, இதய நோய்கள், சுவாசப் பிரச்சனைகள் (ஸ்லீப் அப்னியா), புரோஸ்டேட் விரிவாக்கம் (அடிக்கடி சிறுநீர் கழிக்க எழுவது) போன்ற மருத்துவ நிலைமைகள் தூக்கத்தைத் தொந்தரவு செய்யலாம்.
மருந்துகள்: சில மருந்துகள், குறிப்பாக சளி, அலர்ஜி, ரத்த அழுத்தம், இதய நோய்கள் மற்றும் மனச்சோர்வுக்கான மருந்துகள் தூக்கமின்மையை பக்க விளைவாக ஏற்படுத்தலாம்.
வாழ்க்கை முறை மாற்றங்கள்: ஓய்வு பெற்ற பிறகு ஏற்படும் வாழ்க்கை முறை மாற்றங்கள், சமூக ஈடுபாடு குறைதல், பகலில் அதிக நேரம் தூங்குவது போன்றவை இரவு தூக்கத்தைப் பாதிக்கலாம்.
மனநலப் பிரச்னைகள்: மனச்சோர்வு, பதட்டம் மற்றும் மன அழுத்தம் ஆகியவை தூக்கமின்மைக்கு வழிவகுக்கும். வயது அதிகரிக்கும்போது, உடலின் இயற்கையான தூக்க-விழிப்பு சுழற்சி (சிர்காடியன் ரிதம்) மாறுகிறது. இதனால், இரவில் தாமதமாகத் தூக்கம் வருவது அல்லது அதிகாலையில் விழிப்பு ஏற்படுவது நடக்கலாம்.வெளிச்சம், சத்தம், அசௌகரியமான படுக்கை போன்றவையும் தூக்கத்தைப் பாதிக்கலாம்.
நிம்மதியான தூக்கத்திற்கான தீர்வுகள்:
பகலில் நீண்ட நேரம் தூங்குவதைத் தவிர்க்கவும். மதியம் தூங்க நேர்ந்தால், அதை 30-45 நிமிடங்களுக்குள் சுருக்கிக் கொள்ளுங்கள். இது இரவு தூக்கத்திற்கு உதவும். ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் தூங்கச் சென்று, ஒரே நேரத்தில் எழுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். வார இறுதி நாட்களிலும் இந்த வழக்கத்தைப் பின்பற்றுவது நல்லது. படுக்கையறை இருட்டாகவும், அமைதியாகவும், குளிர்ச்சியாகவும் இருக்க வேண்டும். இது மெலடோனின் (தூக்க ஹார்மோன்) சுரப்பை ஊக்குவிக்கும். படுக்கைக்குச் செல்வதற்கு 2 மணிநேரத்திற்கு முன் மொபைல், டேப்லெட், தொலைக்காட்சி போன்ற அனைத்து எலக்ட்ரானிக் சாதனங்களையும் அணைத்து விடுங்கள். இந்த சாதனங்களில் இருந்து வெளிப்படும் நீல ஒளி தூக்கத்தைப் பாதிக்கும். தூங்குவதற்கு குறைந்தது மூன்று மணிநேரத்திற்கு முன் கனமான உணவுகளை உண்பதைத் தவிர்க்கவும். படுக்கைக்கு முன் மனதை அமைதிப்படுத்தும் செயல்களில் ஈடுபடுங்கள். மென்மையான இசை கேட்பது, புத்தகம் படிப்பது, வெதுவெதுப்பான நீரில் குளிப்பது அல்லது தியானம் செய்வது போன்றவை உதவலாம். பகலில் உடற்பயிற்சி செய்வது அல்லது நடைப்பயிற்சி மேற்கொள்வது இரவு தூக்கத்தை மேம்படுத்தும். ஆனால், தூங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன் தீவிரமான உடற்பயிற்சிகளைத் தவிர்க்கவும்.
வாழ்க்கை முறை மாற்றங்கள் மட்டும் போதுமானதாக இல்லாதபோது, ஆயுர்வேதம் போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகள் உதவலாம்.
ஷிரோதாரா: நெற்றியில் தொடர்ந்து மருந்து எண்ணெயை ஊற்றுவதன் மூலம் செய்யப்படும் சிகிச்சை. இது நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தும். நஸ்யா: மூக்கின் வழியாக மருந்து எண்ணெய்களைச் செலுத்தும் முறை. இது சுவாசப் பாதையை சீராக்கி, மன அமைதியை அளிக்கும். தாளம்: தலையின் உச்சியில் மருந்து எண்ணெயைப் பூசுவது. இது மனதையும் நரம்பு மண்டலத்தையும் பாதிக்கும் ஒரு புள்ளியாகக் கருதப்படுகிறது. அஸ்வகந்தா: ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான மூலிகை. அஸ்வகந்தா ஒரு சிறந்த நரம்பு டானிக்காக செயல்படுகிறது. இது இரவில் நல்ல தூக்கத்தை ஊக்குவிப்பதுடன், பகலில் சுறுசுறுப்புடன் இருக்கவும் உதவுகிறது. அஸ்வகந்தாவை ஒரு தகுதிவாய்ந்த ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்வது நல்லது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.