புதுவிதமாக குடைமிளகாய் துவையல் ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
பெரிய குடைமிளகாய் – 4
மிளகாய் வற்றல் – 1
துவரம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயம் – சிறிதளவு
தேங்காய் துருவல் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு, புளி, – தேவையான அளவு
தாளிக்க
தேங்காய் எண்ெணய் – 2 டேபிள் ஸ்பூன்,
கடுகு உளுத்தம் பருப்பு -சிறிது.
செய்முறை
குடைமிளகாயை கழுவி சுத்தம் செய்து சிறு சிறு நறுக்கி கொள்ளவும். தேங்காய் எண்ணெயில் பெருங்காயம், 1 மிளகாய், பருப்பு வகைகள், தேங்காய் துருவலை சேர்த்து வாசனை வரும்படி வறுத்து எடுத்துக் கொண்டு நறுக்கிய குடைமிளகாயை துண்டுகள் போட்டு வதக்கவும். இவைகளை வதக்கிய பின் உப்பு, புளி கலந்து கரகரப்பாக அரைத்து எடுக்கவும்.
தேங்காய் எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு தாளிக்கவும். தேவைப்பட்டால் கொஞ்சம் வெல்லம் கூட சேர்த்துக் கொள்ளலாம். அவ்வளவு தான் சுவையான குடைமிளகாய் துவையல் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil