வீட்டு தோட்டம் பராமரித்து பல விதமான செடிகளை வளர்க்க வேண்டும் என பலரும் நினைப்பார்கள். ஆனால், அவற்றை பராமப்பரிதற்கு அதிக நேரம் செலவிட வேண்டி இருக்கும் என்பதால், செடி வளர்ப்பில் ஈடுபடாமல் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள், ஏலக்காய் செடியை மிக எளிமையாக வளர்க்கலாம். இதற்கான வழிமுறைகள் குறித்து தற்போது காண்போம்.
ஏலக்காயில் இருந்து அதன் விதைகளை முதலில் தனியாக பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றை ஒரு கிளாசில் போட்டு சிறிது அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும். அதன்பின்னர், 7 மணி நேரம் கழித்து இந்த விதைகளை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
இதையடுத்து, மணல் நிரப்பப்பட்ட தொட்டியில் சிறிது தண்ணீர் தெளித்து விட்டு, இந்த விதைகளை அதில் விதைக்க வேண்டும். இந்த தொட்டியை சூரிய வெளிச்சம் குறைவாக இருக்கும் இடத்தில் வைத்து, மண் வறண்டு போகும் போது தண்ணீர் ஊற்றி பராமரிக்க வேண்டும்.
இப்படி பராமரிப்பதன் மூலம் சுமார் 3 மாதங்களுக்கு பின்னர், ஏலக்காய் செடி நன்றாக வளர தொடங்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“