ஜிம் செல்லும் இளைஞர்களுக்கு எச்சரிக்கை: திடீர் மரண அபாயத்தைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

குறிப்பாக, இளைஞர்கள் மத்தியில் திடீர் மாரடைப்பு அதிகரித்து வரும் சூழலில், உடற்பயிற்சிக் கூடங்களில் சேருவதற்கு முன், உடல் நலப் பரிசோதனைகளை மேற்கொள்வது மிகவும் அவசியமாகிறது.

குறிப்பாக, இளைஞர்கள் மத்தியில் திடீர் மாரடைப்பு அதிகரித்து வரும் சூழலில், உடற்பயிற்சிக் கூடங்களில் சேருவதற்கு முன், உடல் நலப் பரிசோதனைகளை மேற்கொள்வது மிகவும் அவசியமாகிறது.

author-image
WebDesk
New Update
Cardiac Arrest Gym Heart Test Sudden Death Exercise

As sudden cardiac arrests become common in young people, experts urge the need for these medical tests before starting gym

உடற்பயிற்சி என்பது உடல் நலனுக்கு மிகவும் அவசியமான ஒன்று. ஆனால், தவறான அணுகுமுறை அல்லது முறையான மருத்துவ ஆலோசனை இல்லாமல் மேற்கொள்ளப்படும் தீவிர உடற்பயிற்சிகள், சில சமயங்களில் விபரீத விளைவுகளை ஏற்படுத்தலாம். குறிப்பாக, இளைஞர்கள் மத்தியில் திடீர் மாரடைப்பு அதிகரித்து வரும் சூழலில், உடற்பயிற்சிக் கூடங்களில் சேருவதற்கு முன், உடல் நலப் பரிசோதனைகளை மேற்கொள்வது மிகவும் அவசியமாகிறது. தீவிர உடல் உழைப்பு, இதுவரை கண்டறியப்படாத இதயப் பிரச்சினைகளை வெளிப்படுத்தும் ஒரு தூண்டுதலாகச் செயல்படக்கூடும்.

Advertisment

குறிப்பாக 30 வயதுக்கு மேற்பட்டவர்கள், குடும்பத்தில் இதய நோய் பாதிப்பு உள்ளவர்கள் அல்லது உடற்பயிற்சி நிலையங்களில் அதிக உடற்பயிற்சிகளை புதிதாக அல்லது மீண்டும் செய்யத் தொடங்குபவர்களுக்கு, இந்த சோதனைகள், உயிருக்கு ஆபத்தான நிலைக்குச் செல்லும் வரை கவனிக்கப்படாமல் போகும் இதய பாதிப்புகளைக் கண்டறிய உதவுகின்றன என்று டெல்லி சி.கே. பிர்லா மருத்துவமனையின் உள் மருத்துவத் துறையின் முதன்மை ஆலோசகர் டாக்டர் நரேந்தர் சிங்லா தெரிவித்தார்.

பரிந்துரைக்கப்பட்ட ஐந்து முக்கியப் பரிசோதனைகள்

ஈசிஜி (ECG)

இதயத்தின் மின் செயல்பாடுகளைப் பதிவு செய்யும் இந்தச் சோதனை, ஒழுங்கற்ற இதயத் துடிப்புகள் (arrhythmias), மின் கடத்தல் கோளாறுகள் அல்லது முன்பு ஏற்பட்ட மாரடைப்பின் அறிகுறிகளைக் கண்டறிய உதவுகிறது. இது, தீவிர உடற்பயிற்சியின் போது ஆபத்தானதாக மாறக்கூடிய அசாதாரணங்களைக் கண்டறியும் ஒரு நல்ல அடிப்படையை வழங்குகிறது.

2டி எகோ (2D Echo)

இது இதயத்தின் அமைப்பு மற்றும் செயல்பாட்டைப் படம் பிடிக்கும் ஒரு அல்ட்ராசவுண்ட் சோதனை. இது, குறிப்பாக ஹைபர்டிரோபிக் கார்டியோமையோபதி (Hypertrophic Cardiomyopathy) போன்ற இதயத் தசைத் தடிப்பு நோய்களைக் கண்டறிய உதவுகிறது. இது பெரும்பாலும் கண்டறியப்படாத ஒரு நிலையாகும். மேலும், இந்த நோய் தீவிர உடற்பயிற்சியின் போது திடீர் மாரடைப்புக்கு வழிவகுக்கும். இது வால்வு செயல்பாடு, இதய அறைகளின் அளவுகள் மற்றும் ஒட்டுமொத்த இதயத்தின் பம்பிங் திறனையும் மதிப்பிடுகிறது.

டிஎம்டி (Treadmill Test or Stress Test):

Advertisment
Advertisements

Heart

இந்தச் சோதனை, உடற்பயிற்சியின் போது உங்கள் இதயம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை மதிப்பிடுகிறது. இது, உடற்பயிற்சியால் தூண்டப்படும் ஒழுங்கற்ற இதயத் துடிப்பு அல்லது இதயத்திற்கு ரத்த ஓட்டம் தடைபடுதல் போன்ற பிரச்சினைகளை வெளிப்படுத்த உதவும். இது தீவிர உடற்பயிற்சி அல்லது எடை பயிற்சி செய்யத் திட்டமிடுபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

கார்டியாக் பையோமார்கர்ஸ் (Troponin & NT-proBNP):

இந்த ரத்தப் பரிசோதனைகள், இதயத் தசைக்கு ஏற்படும் நுண்ணிய சேதத்தைக் கண்டறிய உதவுகின்றன. டிரோபோனின் (Troponin) என்பது அமைதியான மாரடைப்புக்கான ஒரு குறிப்பான் ஆகும், அதே சமயம் NT-proBNP இதயச் சுவர்களில் ஏற்படும் அழுத்தத்தைக் குறிக்கிறது. இந்த அளவுகள் உயர்ந்திருந்தால், அது இதய நோய்க்கான ஒரு ஆரம்ப எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம்.

மெட்டபாலிக் ஹெல்த் சோதனைகள் (Lipid Profile + HbA1c)

லிபிட் புரொபைல் (Lipid Profile) கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடு அளவுகளை மதிப்பிடுகிறது. இது இதய நோய்களுடன் நேரடியாக தொடர்புடையது. HbA1c பரிசோதனை கடந்த 3 மாதங்களில் உங்கள் சராசரி ரத்த சர்க்கரை அளவைக் காட்டும். இது நீரிழிவு அல்லது பிரீ டையாபட்டீஸ் நிலையை கண்டறிய உதவுகிறது. இவை இரண்டும் இதய நோய் அபாயத்தை கணிசமாக அதிகரிக்கும் நிலைகள்.

இந்த சோதனைகள் ஆடம்பரமானவை அல்ல, அவை உயிரைக் காக்கும் தடுப்புப் பரிசோதனைகள். உங்கள் உடலை நன்கு புரிந்துகொண்டு, நிபுணரின் வழிகாட்டுதலின் கீழ் உடற்பயிற்சிகளைத் தொடங்குவது, ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்யும்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.,

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: