‘ஷாக் அடிக்கும் அபாயம்’: குளிக்கும்போது வாட்டர் ஹீட்டரை ஆன் செய்து வைத்திருக்கலாமா? - இதயநோய் நிபுணர் விளக்கம்

வாட்டர் ஹீட்டரை தொடர்ந்து சர்வீஸ் செய்வது, சரியான எர்த்திங் வசதியைப் பயன்படுத்துவது, வயரிங் இணைப்புகளைச் சரிபார்ப்பது போன்றவை மிகவும் அவசியம். ஈரமான கைகளால் நேரடியாக உலோகக் குழாய்கள், சுவிட்சுகள் அல்லது வாட்டர் ஹீட்டரைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும்.

வாட்டர் ஹீட்டரை தொடர்ந்து சர்வீஸ் செய்வது, சரியான எர்த்திங் வசதியைப் பயன்படுத்துவது, வயரிங் இணைப்புகளைச் சரிபார்ப்பது போன்றவை மிகவும் அவசியம். ஈரமான கைகளால் நேரடியாக உலோகக் குழாய்கள், சுவிட்சுகள் அல்லது வாட்டர் ஹீட்டரைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும்.

author-image
WebDesk
New Update
geyser 1

குளிக்கும்போது உங்கள் வாட்டர் ஹீட்டரைப் பயன்படுத்துவதில் கவனமாக இருங்கள். Photograph: (Image: Freepik)

குளிக்கும்போது உங்கள் வாட்டர் ஹீட்டரின் சுவிட்சை ஆன் செய்து வைத்திருப்பீர்களா? இந்த வழக்கம் பாதுகாப்பானது அல்ல என்று பெங்களூருவில் உள்ள அஸ்டர் சி.எம்.ஐ மருத்துவமனையின் மூத்த ஆலோசகரான டாக்டர் சஞ்சய் பட் indianexpress.com இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஆங்கிலத்தில் படிக்க:

Advertisment

“பெரும்பாலான நவீன வாட்டர் ஹீட்டர்களில் தானாகவே அணைந்துபோகும் வசதி (automatic cut-off), வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் வசதி (thermostat control) மற்றும் முறையான இன்சுலேஷன் வசதிகள் உள்ளன. இருந்தபோதிலும், வயரிங் பழையதாக இருந்தாலோ, எர்த்திங் சரியாக இல்லாமலிருந்தாலோ அல்லது வாட்டர் ஹீட்டரில் ஏதாவது பழுது இருந்தாலோ, மின்சாரம் தாக்கும் அபாயம் உள்ளது” என்று அவர் கூறினார். மேலும், தண்ணீரில் ஒரு சிறிய மின்சார கசிவு இருந்தாலும் அது ஆபத்தானது, குறிப்பாக உடல் ஈரமாக இருக்கும்போது, மின்சாரத்திற்கு அதிக உணர்திறன் கொண்டதாக மாறும் என்பதால், குளியலறையில் இது மிகவும் ஆபத்தானது என்றும் அவர் கூறினார்.

மேலும், தண்ணீர் அதிக வெப்பமடைவதாலும் ஆபத்து ஏற்படலாம் என்று டாக்டர் பட் குறிப்பிட்டார். “வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் கருவி (thermostat) பழுதடைந்தால், தண்ணீர் மிக அதிக வெப்பமாகி தீக்காயங்களை ஏற்படுத்தலாம்” என்று அவர் கூறினார்.

மேலும், திடீரென அதிக வெப்பமான தண்ணீரில் குளிக்கும்போது, தலைச்சுற்றல், குறைந்த இரத்த அழுத்தம் மற்றும் மயக்கம் கூட ஏற்படலாம். இது வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் இதய நோயாளிகளுக்குப் பொதுவாக நடக்கும் ஒரு விஷயம். அதிக நேரம் வெந்நீரில் குளிப்பது சருமத்தை உலர வைத்து, அரிப்பையும் ஏற்படுத்தலாம்.

பாதுகாப்பான வழி எது?

Advertisment
Advertisements

ஆபத்துகளைக் குறைக்க, வாட்டர் ஹீட்டரை ஆன் செய்து தண்ணீரை சூடாக்கிய பிறகு, குளிப்பதற்கு முன் அதை ஆஃப் செய்துவிட வேண்டும் என்று டாக்டர் பட் பரிந்துரைத்தார். இது மின்சார கோளாறுகள் மற்றும் அதிக வெப்பமடைதல் ஆகிய இரண்டிலிருந்தும் பாதுகாப்பை உறுதி செய்கிறது. “வாட்டர் ஹீட்டரை தொடர்ந்து சர்வீஸ் செய்வது, சரியான எர்த்திங் வசதியைப் பயன்படுத்துவது, வயரிங் இணைப்புகளைச் சரிபார்ப்பது போன்றவை மிகவும் அவசியம். ஈரமான கைகளால் நேரடியாக உலோகக் குழாய்கள், சுவிட்சுகள் அல்லது வாட்டர் ஹீட்டரைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும்” என்றும் அவர் கூறினார்.

geyser 2
அதிக நேரம் வெந்நீரில் குளிப்பது சருமத்தை உலர வைத்து, அரிப்பையும் ஏற்படுத்தலாம். Photograph: (Image: Freepik)

வாட்டர் ஹீட்டர்கள் முறையாக நிறுவப்பட்டுப் பராமரிக்கப்பட்டால் பொதுவாகப் பாதுகாப்பானவை என்றாலும், குளிக்கும்போது அதை ஆன் செய்து வைத்திருப்பது ஆபத்தானது. எனவே, தண்ணீரைச் சூடாக்கி, வாட்டர் ஹீட்டரை ஆஃப் செய்த பிறகு குளிப்பதே பாதுகாப்பான முறையாகும்.

வெந்நீர் குளியல் Vs குளிர்ந்த நீர் குளியல்

வெந்நீர் குளியல் ரத்த நாளங்களை விரிவடையச் செய்து, ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதால், தசை இறுக்கத்தைக் குறைத்து, மனதுக்கு ஓய்வைத் தரும் என்று மும்பையின் நானாவதி மேக்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மூத்த ஆலோசகரான டாக்டர் வந்தனா பஞ்சாபி கூறினார். மேலும், “வெந்நீரிலிருந்து வரும் நீராவி சுவாசப் பாதையில் உள்ள அடைப்பைப் போக்கி, சளி மற்றும் அலர்ஜி அறிகுறிகளில் இருந்து நிவாரணம் அளிக்கும்” என்றும் அவர் கூறினார்.

மறுபுறம், குளிர்ந்த நீர் குளியல் புத்துணர்ச்சி அளிக்கும் தன்மைகளுக்குப் பெயர் பெற்றது. “குளிர்ந்த நீர் உடலில் பட்டதும், நரம்பு மண்டலத்தைத் தூண்டி, விழிப்புணர்வையும், ஆற்றலையும் அதிகரிக்கும். குளிர்ச்சி வீக்கத்தைக் குறைத்து, உடற்பயிற்சிக்குப் பிறகு தசை மீட்சியை விரைவுபடுத்தும்” என்று டாக்டர் பஞ்சாபி கூறினார்.

எதைத் தேர்வு செய்யலாம்?

தொடர்ந்து தசை வலி உள்ளவர்கள் அல்லது தூங்குவதற்கு முன் ஓய்வெடுக்க விரும்புபவர்களுக்கு வெந்நீர் குளியல் சிறந்தது. அதே சமயம், தசை வலி உள்ள விளையாட்டு வீரர்கள் மற்றும் உடல் உழைப்பு உள்ளவர்களுக்குக் குளிர்ந்த நீர் குளியல் மிகவும் பொருத்தமானது. "வெந்நீர் குளியல் சருமத்தை உலர வைக்கும். அரிக்கும் தோலழற்சி, சொரியாசிஸ், டெர்மடிடிஸ் போன்ற தோல் நோய்களை மோசமாக்கும். எனவே, இதுபோன்ற தோல் பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு வெதுவெதுப்பான நீர் குளியல் பரிந்துரைக்கப்படுகிறது. குளித்த பிறகு, ஈரப்பதம் வெளியேறாமல் இருக்க மாய்ஸ்சரைசரை உடனடியாகப் பூச வேண்டும்" என்று டாக்டர் பஞ்சாபி விவரித்தார்.

மறுபுறம், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் இரத்த ஓட்டம் குறைவாக உள்ளவர்களுக்குக் குளிர்ந்த நீர் குளியல் நல்லது என்று மும்பையின் ரெஜுவா எனர்ஜி சென்டரின் அக்குபஞ்சர் மற்றும் இயற்கை மருத்துவ நிபுணரான டாக்டர் சந்தோஷ் பாண்டே கூறினார். மேலும், முகப்பரு உள்ளவர்கள் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவலாம் என்றும், இது சருமத்தை அமைதிப்படுத்தி, முகப்பருவை மேலும் அதிகரிக்காமல் தடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவல்கள் மற்றும் நிபுணர்களின் கருத்துகளின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. எந்த ஒரு வழக்கத்தையும் தொடங்குவதற்கு முன், உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: