/indian-express-tamil/media/media_files/2025/06/01/xFGer9BTvhLuu3L3cIAC.jpg)
ஏ.ஐ.யால் கேலிச் சித்திரங்கள் நலிவடைவு: ஓவியர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!
கேலிச்சித்திரங்கள் என்பன வெறும் நகைச்சுவைக்கானவை மட்டுமல்ல. அவை சமூக, அரசியல், தொழில்நுட்ப மாற்றங்கள் குறித்த ஆழமான விமர்சனங்களையும் கேள்விகளையும் எழுப்பும் சக்திவாய்ந்த கலை வடிவம். ஏ.ஐ. அபரிமிதமான வளர்ச்சி கேலிச்சித்திரங்களின் படைப்புகளை குறைக்கின்றன. மனிதக் கலைஞர்களின் இடத்தையும் முக்கியத்துவத்தையும் இது குறைத்துவிடுமோ என்ற அச்சம் கலை உலகில் நிலவுகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவபிரகாஷ். இவரது தந்தை மற்றும் அண்ணன் ஆகிய இருவருமே ஓவியர்கள்தான். படிக்கும்போது ஆனந்த விகடன் பத்திரிகையில் வரும் கார்ட்டூன் பார்த்து அதன்மேல் சிவபிரகாஷுக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளது. தற்போது, விடுமுறை நாட்களில் சுற்றுலாத் தலங்கள், திருமண கூட்டங்களில் கலை நிகழ்ச்சி செய்யும் இடங்கள், பிறந்தநாள் விழாவில் தனது தனது திறமையில் காண்பித்து பணம் சம்பாதிக்கிறார் சிவபிரகாஷ்.
புதுச்சேரி பகுதி சுற்றுலாத் தலமாக வளர்ந்து வருவதால் ஒயிட் டவுன் , கட்சி காலனி, கஃபே பல்வேறு இடங்களில் அமர்ந்து தனது கேளிக்கை சித்திர ஓவியத்தை 2 நிமிடத்தில் வரைந்து அசத்துகிறார். தற்போது கேலிச்சித்திரம் ஓவியங்கள் பெரிதாக எடுபடுவதில்ல. ஏனென்றால் கேளிக்கை சித்திரம் தற்போது டிஜிட்டல் முறையில் மாறுகிறது . நவீன உலகத்தில் இன்டெலிஜென்ட் ஏ.ஐ என்ற நவீன முறையில் தற்போது மாறி வருவதால் எங்களைப் போன்ற ஓவியர்களுக்கு பெரிதாக வாய்ப்பு வருவதில்லை என்கிறார் சிவபிரகாஷ்.
12-ம் வகுப்பு வரை ராமநாதபுரத்தில் பிடித்துவிட்டு அதற்கு மேல் படிப்பதற்கு வசதி இல்லாததால் படிப்பை நிறுத்திவிட்டு கேலிச் சித்திரம் ஓவியத்தில் தனது ஆர்வத்தை காண்பித்துள்ளார். உள்ளூரிலேயே நடக்கும் திருமண விழாவில் கலந்துகொண்டு திருமண விழாவிற்கு வரும் சிறுவர், சிறுமிகள், முதியோர்களை அவர்களின் உருவத்தை 2 நிமிடத்தில் கேலிச் சித்திரம் மூலமாக வரைந்து தனது திறமையை வெளிப்படுத்திக் கொண்டார்.
உள்ளூர் மக்கள் பலர் பல்வேறு நிகழ்ச்சிகளில் சிவபிரகாஷை அழைக்க ஆரம்பித்தனர். தற்போது அவர் திருமண விழாவில் கலந்துகொள்ள 4 மணி நேரத்திற்கு 9000 ரூபாய் பணம் வசூலிக்கிறார். இதில் வரும் வருமானத்தைக் கொண்டு சென்னையில் போரூர் அனிமேஷன் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து முடித்திருக்கிறார். வார இறுதி நாட்களில் எங்கெங்கெல்லாம் சுற்றுலா தலங்கள் இருக்கிறதோ அங்கு சென்று தனது திறமையை காண்பித்து பணம் சம்பாதிக்கிறார் சிவபிரகாஷ்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.