Carrot Egg Recipe in Tamil : கேரட், ஒரு சத்தான காய்கறி. கண் பார்வைக்கு கேரட் முக்கியம். பார்வை குறைபாடு உடையவர்களை பச்சைக் கேரட்டையே சாப்பிட மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். அதேபோல உணவிலும் தவறாமல் பயன்படுத்தலாம்
Advertisment
உடல் ஆரோக்கியத்திற்கு முட்டை முக்கியமானது. முட்டை பொரியல், ஆம்லெட், வேகவைத்த மசாலா முட்டை என பல வகைகளில் சாப்பிடலாம்.
பல நேரங்களில் நம் பவீட்டு பிள்ளைகள் கேரட் பொரியலை சாபிடுவதில்லை. ஆனால் , கேரட் - முட்டை பொரியல் குழந்தைகளுக்கு பிடித்தமானதாக இருக்கும்.
எனவே, கேரட் - பொரியல் எப்படி செய்வது என்பதை இங்கே காணலாம்.
Advertisment
Advertisements
தேவையானப் பொருள்கள்:
கேரட் - 1
சின்ன வெங்காயம் - 5
பச்சை மிளகாய் - 1
மஞ்சள் தூள் - தேவைக்கேற்ப
முட்டை - 2
உப்பு - தேவைக்கேற்ப
உங்கள் கடாயில், தேவைக்கேற்ப எண்ணெயை ( 3 டீஸ்பூன்) ஊற்றி கடுகு, உளுந்து, சீரகம் போன்றவற்றை ஒன்றன் பின் ஒன்றாகத் போட்டு தாளிக்க வேண்டும்.
அதன்பின், பொடி பொடியாக நறுக்கப்பட்ட வெங்காயத்தை போட்டு வதக்க வேண்டும். சில நிமிடங்களுக்குப் பிறகு, பச்சை மிளகாயை போட்டு வதக்க வேண்டும்.
பின்பு, குட்டி குட்டியாக நறுக்கப்பட்ட கேரட்டையும் போட்டு வதக்க வேண்டும். தேவையான அளவிற்கு உப்பை சேர்த்துக் கொள்ளவும்.
அதன் பிறகு, மஞ்சள் தூள் (கால் டிஸ்பூன் ) , மிளகாய் தூள்( கால் டீஸ்பூன்) போட்டு நன்கு வதக்க வேண்டும். கேரட் வதங்கியதும் அதில் முட்டையை உடைத்து ஊற்றிக் கிளறிவிடவும்.
அவ்வளவு தான், கேரட் - முட்டை பொரியல் ரெடி
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”