செம்ம சுவையான கேரட் அல்வா, ஒரு முறை இப்படி செய்யுங்க. செம்ம ஈசியான ரெசிபி
தேவையான பொருட்கள்
டெல்லி கேரட் 4
3 டேபிள் ஸ்பூன் நெய்
1 லிட்டர் பால்
1 கப் சர்க்கரை
ஒரு சிட்டிகை உப்பு
கால் ஸ்பூன் ஏலக்காய் பொடி
200 கிராம் இனிப்பு இல்லாத கோவா
பாதம் பொடித்தது 1 ½ ஸ்பூன்
2 ஸ்பூன் நெய்
செய்முறை: கேரட்டை நன்றாக துருவிக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து கேரட் துருவியதை சேர்த்து கிளரவும். நன்றாக வாசனை வந்ததும், அதில் பால் சேர்க்கவும். பாலில் கேரட் நன்றாக வேக வைக்க வேண்டும். தொடர்ந்து அதில் சர்க்கரை சேர்கக்வும். இதை சில முறை கிளர வேண்டும். உப்பு சேர்க்கவும். ஏலக்காய் பொடி சேர்க்கவும். தொடர்ந்து கோவா சேர்த்து கிளரவும். சில நிமிடங்கள் கழித்து நெய்யில் பாதாம் பொடித்ததை சேர்க்கவும். இதை அல்வாவில் சேர்க்கவும்.