குழந்தைங்க லஞ்ச் பாக்ஸுக்கு பெஸ்ட் இதுதான்! கேரட் சாதம் செய்முறை

Carrot Rice Home Cooking Tamil Video: அலுவலகம் செல்வோர், பள்ளி செல்லும் குழந்தைகள் ஆகியோருக்கு கேரட் சாதம் அற்புதமான லஞ்ச். கேரட் சாதம் எப்படி தயார் செய்வது?

Carrot Rice Home Cooking Tamil Video: அலுவலகம் செல்வோர், பள்ளி செல்லும் குழந்தைகள் ஆகியோருக்கு கேரட் சாதம் அற்புதமான லஞ்ச். கேரட் சாதம் எப்படி தயார் செய்வது?

author-image
WebDesk
New Update
குழந்தைங்க லஞ்ச் பாக்ஸுக்கு பெஸ்ட் இதுதான்! கேரட் சாதம் செய்முறை

Carrot Rice Recipe (Source: Dr Dixa Bhavsar/Instagram; designed by Gargi Singh)

Carrot Rice Recipe, Carrot Rice Home Cooking Tamil Video: கேரட், ஒரு சத்தான காய்கறி. கண் பார்வைக்கு கேரட் முக்கியம். பார்வை குறைபாடு உடையவர்களை பச்சைக் கேரட்டையே சாப்பிட மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். அதேபோல உணவிலும் தவறாமல் பயன்படுத்தலாம்.

Advertisment

கேரட்டை சாம்பாரிலும், கூட்டாகவும் பயன்படுத்த முடியும். அதேபோல அலுவலகம் செல்வோர், பள்ளி செல்லும் குழந்தைகள் ஆகியோருக்கு கேரட் சாதம் அற்புதமான லஞ்ச். கேரட் சாதம் எப்படி தயார் செய்வது? என்பதை இங்குக் காணலாம்.

Carrot Rice Home Cooking Tamil Video: கேரட் சாதம்

Advertisment
Advertisements

கேரட் சாதம் செய்யத் தேவையான பொருட்கள்: கேரட் - 100 கிராம், சாதம் - ஒரு கப், பெரிய வெங்காயம் - 1, உளுந்தப் பருப்பு - ஒரு டீ ஸ்பூன், மஞ்சள் தூள் - கால் டீ ஸ்பூன், பிரியாணி இலை - 1, பட்டை - 1, ஏலக்காய் - 2, பச்சை மிளகாய் - 1, துருவிய தேங்காய் - ஒரு டேபிள் ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை- எண்ணெய்- உப்பு தேவையான அளவு.

கேரட் சாதம் செய்முறை:

கேரட் சாதம் செய்முறை வருமாறு: வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், தேங்காய் சேர்த்து வறுக்கவும். அதை ஆறவைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள்.

அதே வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும், பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். கூடவே கறிவேப்பிலை சேர்க்கவும். பின்னர் துருவிய கேரட், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலந்து வேகவிடவும்.

கேரட் வெந்ததும், அரைத்து வைத்த மசாலா சேர்த்து கிளறி விடுங்கள். பிறகு இதில் சாதம் சேர்த்து கிளறி விடுங்கள். சுவையான கேரட் சாதம் தயார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

 

 

Food Recipes

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: