மன நிம்மதியைத் தரும் பூனைகள்... வெறும் செல்லப்பிராணிகள் அல்ல; கவலைகளைப் போக்கும் நண்பன்!

பூனைகள் தங்கள் அமைதியான சுபாவத்தாலும், அன்பான நடத்தையாலும் மனிதர்களின் மன அழுத்தத்தைக் குறைத்து, பெரும் ஆறுதலை அளிக்கின்றன. அதன் குறும்புகள், விளையாட்டுத்தனங்கள், அன்பு செலுத்தும் விதம் என அனைத்தும் நம் வாழ்வில் மகிழ்ச்சியை நிரப்புகின்றன.

பூனைகள் தங்கள் அமைதியான சுபாவத்தாலும், அன்பான நடத்தையாலும் மனிதர்களின் மன அழுத்தத்தைக் குறைத்து, பெரும் ஆறுதலை அளிக்கின்றன. அதன் குறும்புகள், விளையாட்டுத்தனங்கள், அன்பு செலுத்தும் விதம் என அனைத்தும் நம் வாழ்வில் மகிழ்ச்சியை நிரப்புகின்றன.

author-image
Meenakshi Sundaram S
New Update
Cats reduce stress

மன நிம்மதியைத் தரும் பூனைகள்... வெறும் செல்லப்பிராணிகள் அல்ல; கவலைகளைப் போக்கும் நண்பன்!

நாம் வாழும் இந்த நிச்சமற்ற உலகில், மெல்லிய ஆறுதலையும், சில கணங்கள் நிம்மதியையும் தேடி மனம் அலைபாய்கிறது. அப்படியான தருணங்களில், நம்மைத் தேடிவரும் சில மென்மையான உயிர்கள் உண்டு. அவை நம் ஆன்மாவைத் தொட்டு, இதயத்தை நிறைத்து, வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத கண்ணீர்ப் பூக்களாக, காலத்தால் அழியாத உறவுகளாக மாறிவிடுகின்றன. அந்த உயிர்களின் வரிசையில், பூனைகளுக்குத் தனி இடம் உண்டு எனலாம்.

Advertisment

ஒரு கடினமான நாளுக்கு பிறகு, சோர்வுற்று வீட்டிற்கு வருகிறோம். உள்ளே காலடி எடுத்து வைத்ததும், நம் கால்களைச் சுற்றி மெல்லிய தேய்ப்பு.  அதன் இனிமையான 'மியாவ்' சத்தத்தைக் கேட்கும்போது, அனைத்துக் கவலைகளும் பறந்துபோகிறது. நம் அணைப்பில், தலையைக் கோதி விடும்போது, பூனை தன் உடல் முழுவதையும் தளர்த்தி, ஆழ்ந்த அமைதியில், திருப்தியில் கண்கள் மூடும். அதன் மென்மையான ரோமத்தில் விரல்கள் பதிக்கும்போது, தாயின் கருணை மற்றும் குழந்தையின் அன்பை போல, ஏதோ ஒன்று இதயத்திற்குள் கரைந்து, மன அழுத்தம் எல்லாம் பனிபோல் விலகுவதை உணரமுடியும். அவற்றின் இருப்பு தனிமையைத் துடைத்து, வார்த்தைகளால் விளக்க முடியாத ஆறுதலை அள்ளித் தருகிறது.

நாம் கொடுக்கும் கைப்பிடி உணவிற்காகவும், ஒரு சில வருடல்களுக்காகவும், அவை தங்கள் முழு அன்பையும், விசுவாசத்தையும் நமக்குக் காணிக்கையாக்குகின்றன. அவை நம்மை ஒருபோதும் குறை கூறுவதில்லை; தீர்ப்பளிப்பதில்லை. நாம் எப்படி இருந்தாலும், என்ன செய்தாலும், அதன் தூய்மையான கண்கள் நம்மை அன்புடனும், பாசத்துடனும் மட்டுமே பார்க்கின்றன. இந்த நிபந்தனையற்ற அன்பு, உலகில் வேறு எங்கு கிடைக்கும்?

அந்த அப்பாவிப் பூனையின் வாழ்நாள் முழுவதும், மனிதர்களாகிய நாம்தான் அதன் உற்ற நண்பர்கள், அதன் ஒரே நம்பிக்கைத் துணைகள். பிறந்த கணத்தில் இருந்து, இறுதி மூச்சு வரை, நம் பாதுகாப்பு வளையத்திற்குள்தான் அதன் ஒவ்வொரு அசைவும் இருக்கும். நாம் கொடுக்கும் உணவு, மருந்து, அன்பு, அரவணைப்பு, இவை அனைத்தும்தான் அதன் உயிர் மூச்சு. ஒரு பூனையுடன் நாம் வளரும்போது, அது வெறும் வளர்ப்புப் பிராணி மட்டுமல்ல. அது நமது குடும்பத்தின் ஓர் உறுப்பினராக, நம் வாழ்வின் ஒவ்வொரு அசைவிலும் பங்கு பெறும் ஓர் நண்பனாக மாறுகிறது. அதன் குறும்பு, விளையாட்டுகள், அன்பான அழைப்புகள் இவையெல்லாம் நம் வாழ்வை இனிமையால் நிரப்பி, மனதில் நீங்கா நினைவுகளைப் பதித்துவிடுகின்றன. காலங்கள் கடந்தாலும், அவற்றின் சிறிய அசைவுகள் கூட நம் நினைவில் பசுமையாய் வாழும்.

Advertisment
Advertisements

பூனைகள் நம் மன ஆரோக்கியத்திற்குப் பல வழிகளில் உதவுகின்றன. அவற்றின் அரவணைப்பு ரத்த அழுத்தத்தைக் குறைப்பதாகவும், மன உளைச்சலைப் போக்குவதாகவும் ஆய்வுகள் நிரூபிக்கின்றன. அவற்றின் சுறுசுறுப்பும், விளையாட்டும் முகத்தில் புன்னகையை வரவழைக்கும். மேலும், ஒரு பூனையைப் பராமரிப்பது, பொறுப்புணர்வையும், கருணையையும் வளர்க்கிறது.

பூனைகள் வெறும் உயிரினங்கள் அல்ல. அவை நம் மனதிற்கு நிம்மதியைத் தரும் இதமான காற்று, மன அழுத்தத்தைப் போக்கும் மௌனத் தோழர்கள், வாழ்நாள் முழுவதும் நம்முடன் பயணிக்கும் அன்பான உறவுகள். ஒரு பூனையின் வாழ்நாள் முழுவதும் நாம் தான் அதன் மிக உற்ற நண்பர்கள், பாதுகாவலர்கள் என்பதை உணர்ந்து, அவற்றிற்கு அன்பையும், பாதுகாப்பையும் வழங்கி, ஒருபோதும் அவற்றைக் காயப்படுத்தாமல் வாழ்வோம். அவை நாம் மறக்க முடியாத, நிபந்தனையற்ற அன்பை வழங்கும் வாழ்நாள் நண்பர்களாக, நம் கண்களில் கண்ணீரை வரவழைக்கும் தூய்மையான ஆத்மாக்களாகத் திகழ்கின்றன.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: