செஃப் தாமு செய்வது போல் நீங்களும், காலிஃப்ளவர் குருமா செய்து பாருங்க.
தேவையான பொருட்கள் :
காலிஃப்ளவர் - 1
தேங்காய் துருவல் - 1/4 கப்
பெரிய வெங்காயம் - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
தக்காளி - 2
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - அரை டீஸ்பூன்
சீரகத்தூள் - கால் தேக்கரண்டி
பெருஞ்சீரகத்தூள் - கால் தேக்கரண்டி
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
தாளிக்க…
சோம்பு - 1 டீஸ்பூன்
ஏலக்காய், கிராம்பு, பட்டை
செய்முறை: முதலில் காலிஃப்ளவரை நீரால் நன்கு கழுவி சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். தொடர்ந்து தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.பிறகு, மிக்சியில் தேங்காய் துருவல், சோம்பு ஆகியவற்றை சேர்த்து விழுதாக அரைக்கவும்.இப்போது ஒரு பாத்திரம் எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். இவை நன்கு வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இவற்றின் பச்சை வாசனை நீங்கியவுடன் தக்காளியை சேர்த்து குழைய வதக்கி கொள்ளவும்.
பிறகு மிளகாய் தூள், சீரகத்தூள், கரம் மசாலா, பெருஞ்சீரகத்தூள் சேர்த்து நன்கு கிளறவும். தொடர்ந்து அவற்றுடன் காலிஃப்வரையை இட்டு வதக்கவும். பின்னர், முன்பு அரைத்த தேங்காய் விழுதை சேர்த்துக் கிளறவும். அதன்பிறகு தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து சிறிது கொதிக்க விடவும்.பிறகு கொத்தமல்லி தழையைத் தூவி கீழே இறக்கினால் நீங்கள் எதிர்பார்த்த காலிஃப்ளவர் குருமா தயாராக இருக்கும். இந்த சூப்பரான காலிஃப்ளவர் குருமாவை சப்பாத்தி, இட்லி, இடியாப்பம், நாண், தோசை என உங்களுக்கு பிடித்த உணவுகளுடன் சேர்த்து ருசித்து மகிழவும்.