சுவையான காலிஃப்ளவர் பன்னீர் கிரேவி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
தேங்காய் எண்ணெய் – 1 ஸ்பூன்
இஞ்சி – 2 சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிறிதளவு
வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 3
தக்காளி – 2
உப்பு -1 டீஸ்பூன்
மஞ்சுள் தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
காலிஃப்ளவர் – 500 கிராம்
பன்னீர் – 200 கிராம்
தேங்காய் பால் – 150 மிலி
கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை
முதலில் காலிஃப்ளவரை சுடுநீரில் போட்டு 10 நிமிடம் மூடி வைத்து இறக்கவும். இப்போது ஒரு கடாய் எடுத்து அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து ஒருநிமிடம் வதக்க வேண்டும். பின்னர் அதில் வெங்காயத்தை சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
இப்போது இதில் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும். அடுத்து காலிஃப்ளவர் சேர்த்து ஒருமுறை கிளறி, 1 கப் நீரை ஊற்றி, மிதமான தீயில் வைத்து 10 நிமிடம் வேக வைக்க வேண்டும். காலிஃப்ளவர் நன்கு வெந்ததும், பன்னீர் துண்டுகளை சேர்த்து குறைவான தீயில் வைத்து, 5 நிமிடம் வேக வைக்கவும். கடைசியாக தேங்காய் பாலை சேர்த்து, 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், நாவில் எச்சில் ஊறும் காலிஃப்ளவர் பன்னீர் கிரேவி தயார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“