Advertisment

தோல் அரிப்பா? அப்போ இதை செய்யுங்க... டிப்ஸ்!

தோல் அரிப்பு ஏற்பட்டவுடன், அதை வெறும் அரிப்புதானே என்று எடுத்துக்கொள்ளாமல், அதன் காரணத்தை அறிந்துகொள்ள வேண்டும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தோல் அரிப்பா? அப்போ இதை செய்யுங்க... டிப்ஸ்!

Woman Scratching Her Arm Sitting on Bench at Park

தோலில் முக்கியமாக ஏற்படும் பிரச்சினை அரிப்பு. உடலில் என்ன பிரச்சினை ஏற்பட்டாலும் அரிப்பின் மூலம் அதை முதலில் அறிவிப்பது தோல்தான்.

Advertisment

தோல் அரிப்பு ஏற்பட்டவுடன், அதை வெறும் அரிப்புதானே என்று எடுத்துக்கொள்ளாமல், அதன் காரணத்தை அறிந்துகொள்ள வேண்டும்.  நாம் உண்ணும் உணவில் உள்ள கத்தரிக்காய், தக்காளி, புளி, கடுகு, நல்லெண்ணெய், காலிபிளவர், கருணைக்கிழங்கு, காளான் ஆகியவையும், மா, கொய்யா போன்ற பழங்களும் மீன், கருவாடு, வறுத்த கோழி, முட்டை போன்றவையும் தோல் நோய் உள்ளவர்களுக்கு அரிப்பை அதிகப்படுத்தும்.

மேலும் சில காரணங்கள் உடலின் சத்து குறைபாடு, கிருமிகள், சிறுநீரகத்தில் கழிவுகள் சரியாக வெளியேறாமல் உள்ளே படியும்போது, நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இவற்றில் எதுவாக இருந்தாலும் அரிப்பு உண்டாகும்.  சரி இதற்கு என்ன செய்யலாம்?

இதற்கு ரத்தப் பரிசோதனை செய்து பார்த்தால் தெரிந்துவிடும். அதற்கேற்ப மேற்கூறிய உணவுகளைத் தவிர்ப்பதுடன் அரிப்பு குணமாகும் வரை அதிகளவு நீர் அருந்துவது மிகவும் அவசியம்.

பூச்சிக்கடியால் ஏற்படும் தடிப்பு, வீக்கம், கீறல், அரிப்பு போன்றவை பகலில் குறைந்தும் மாலை மற்றும் இரவு நேரங்களில் அதிகரித்தும் விடும். இவை சில நேரங்களில் சிகிச்சைக்குக் கட்டுப்பட்டோ அல்லது தானாகவோ குணமடைகின்றன.

தேள்கொடுக்கு (Heliotropium)

பல நேரங்களில் நோய் தீவிரமடைந்து தோலில் கறுப்பு, சிவப்பு புள்ளிகளையும் தோல் மாற்றத்தையும் உண்டாக்குகின்றன. நாம் உண்ணும் உணவில் உள்ள ஒவ்வாத பொருட்களும் அரிப்பு அதிகமாக காரணமாகின்றன. ஒவ்வாமை, அரிப்பு நீக்கி தோலுக்குப் பொலிவைத் தரும் அற்புத மூலிகைச் செடி தேள்கொடுக்கு.

publive-image

இவை பூச்சிக்கடியால் தோன்றும் விஷத்தை முறிக்கும் தன்மை உடையன.தேள்கொடுக்கில் சிறு தேள்கொடுக்கு, பெருந்தேள்கொடுக்கு என இரண்டு வகைகள் உள்ளன. இவை இரண்டும் ஒரே மருத்துவ குணத்தைக் கொண்டவை. முதலில் தேள்கொடுக்கு இலை மற்றும் பூங்கொத்துகளை உலர்த்தி, ஒன்றிரண்டாக இடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை: 20 கிராம் பொடியை 500 மிலி நீரில் போட்டு கொதிக்கவைத்து 100 மிலியாக சுண்டிய பின்பு வடிகட்டி காலை மற்றும் மாலை உணவுக்கு முன்பு குடித்துவர வேண்டும். இலையை கசக்கி பூச்சிகடித்த இடங்களிலும், தடிப்புள்ள இடங்களிலும் தடவிவர தடிப்பு குணமாகும். நாட்டுப்புற மருத்துவத்தில் தேள்கொடுக்கு செடியின் இலைகள் தேள்கடி விஷத்தை நீக்க பயன்படுத்தப்படுகின்றன. தேள் கடித்த இடத்திலுள்ள தோல் பகுதியில் இதன் இலைச்சாறை பிழிந்து தடவுவது வழக்கம்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment